பக்கம்:நெய்தற் கன்னி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ஒ 55

காணாமை இருள் பரப்பிக் கையற்ற கங்குலான் மாணா நோய் செய்தான்கண் சென்றாய்; மற்று அவனைநீ காணவும் பெற்றாயோ? காணாயோ? மடநெஞ்சே! கொல் ஏற்றுச் சுறவினம் கடிகொண்ட மருள்மாலை அல்லல் நோய் செய்தான்கண் சென்றாய்; மற்று

அவனைநீ 10

புல்லவும் பெற்றாயோ? புல்லாயோ? மடநெஞ்சே! வெறிகொண்ட புள்ளினம் வதிசேரும் பொழுதினால் செறிவளை நெகிழ்த்தான்கண் சென்றாய்; மற்று அவனைநீ அறியவும் பெற்றாயோ? அறியாயோ? மடநெஞ்சே! எனவாங்கு 15 எல்லையும் இரவும் துயில்துறந்து பல்லூழ் அரும்படர் அவலநோய் செய்தான்கண் பெறல் நசைஇ, இருங்கழி ஒதம்போல் தடுமாறி வருந்தினை அளிய; என் மடங்கெழு நெஞ்சே!”

காப்பு மிகுதிக்கண் ஆற்றாத தலைவி, தலைவன்பால் சென்ற நெஞ்சினை நோக்கி வருந்திக் கூறியது.

2. சுரும்பு - தேன்வண்டு; இரும்தும்பி - கரியதும்பி. 3. இமிழ்தலின் - ஒலித்தலின், 9. ஏறு - ஆண், கடிகொண்டு - போகாவண்ணம் தடைசெய்த; 12. வெறிகொண்ட - வரிசை வரிசையாக வரும், வதி= வாழிடம்;16. பல்லூழ்- பலமுறை:17. படர் - வருத்தம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/57&oldid=590134" இலிருந்து மீள்விக்கப்பட்டது