பக்கம்:நெய்தற் கன்னி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

விரைக நின் செலவே!

கடற்றுறை நகர் ஒன்றில் வாழ்ந்திருந்தாளொருத்தி, பெண்டிரும் ஆண்மை விரும்பும் பேரழகுடையளாய் விளங்கினாள். பிறைத் திங்கள் போலும் பெருவனப்புடை யது அவள் நெற்றி, அணைபோலும் மென்மையுடைய பருத்த அவள் தோள்கள்; வெற்றிப் புகழ் விளங்கும் வேலின் முனையை வென்றன காதளவோடிய அவள் கருவிழிகள்; இத்தகு உறுப்பு நலங்கள் அளிக்கும் அளவிலா அழகுடைய அவள், அவளோடு ஆடி மகிழும் அவ்வூர்ப் பெண்கள் அனைவரினும் அழகுடையளாவள். அதனால், பிற மகளிர் அழகைப் பார்க்கும் அவ்வூர் மக்கள் அவள் அழகையே அளவுகோலாகக் கொண்டு, அவள் அழகில் காற்கூறு உடையாள் இக் காரிகை, அவளிற் பாதி இப்பேதை' என மதிக்கத் தலைப்பட்டனர்.

இத்தகைய பேரழகுடையாளைப் பார்த்துவிட்டான் ஒர் இளைஞன். அவளைப் போலவே பிறிதொரு கடற்றுறை நகரைச் சேர்ந்த அவ்விளைஞன், அவளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/58&oldid=590135" இலிருந்து மீள்விக்கப்பட்டது