பக்கம்:நெய்தற் கன்னி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி 57

கண்ட அந்நிலையே, அவன் நெஞ்சு அவனைக் கைவிட்டு அவள்பால் அடைக்கலம் புகுந்து விட்டது. அவனைக் கண்ணுற்ற அவள் நிலையும் அன்னதே ஆயிற்று. இருவர் உள்ளங்களும் ஒன்று பட்டன; அன்று முதலாகப் பிறர் அறியாவாறு கலந்து மகிழத் தொடங்கினர். அவ்வின்ப உணர்வால் இருவரும் தம்மை மறந்தனர். அந்நிலையில் நாள் சில சென்றன. பொருளிட்டி வரப்போக வேண்டிய இன்றியமையாமை இளைஞனுக்கு உண்டாயிற்று, தன் மணவினைக்கு வேண்டும் மாநிதிகளைத் தானே தேடிப் பெறுதல் வேண்டும் என்ற விழுமிய உள்ளம் வாய்க்கப் பெற்றமையால் இளைஞன் பொருளிட்டி வரும் கருத்துடையனாயினான். அதனால் காதலை ஒருவாறு மறந்து வெளிநாடு சென்று வினை மேற்கொண்டு வாழ்ந்திருந்தான்.

காதலன் சிறந்த கடமையை முன்னிட்டுப் போயுள்ளமையினாலேயே காண வந்திலன் என்பதை அவள் அறியினும், அவள் காதலுணர்வு அச்சிறு பிரிவை யும் தாங்கிக் கொள்ள மாட்டாது துயர் கொண்டது. ஊணும் உறக்கமும் இழந்து வருந்தினாள். உள்ளுணர்வு உற்ற துயர் அவள் உடல் நலனை அழித்தது. புறநலத்தின் பொலிவு இழந்து போனதைக் கண்ட ஊர்ப் பெண்டிர் அலர் கூறி அவளைப் பழித்தனர். காதல் இன்பம் பெற மாட்டாது கலங்கிய அவள், ஊர்ப் பெண்டிரின் பொல்லாங்கு மிக்க பழியுரை கேட்டுப் பெரிதும் கலங்கினாள். உடல் உறுப்புக்கள், அவர் உணருமளவு நலன் இழந்து நலிந்து போகும் வண்ணம், உள்ளம் துயர் உற்றமையால் அன்றோ, ஊரார்க்கு நம் காதல் ஒழுக்கம் புலனாயிற்று; அதனாலன்றோ, அவர்கள் நம்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/59&oldid=590136" இலிருந்து மீள்விக்கப்பட்டது