பக்கம்:நெய்தற் கன்னி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 இ. புலவர் கா. கோவிந்தன்

நலத்தில் கண்ணனின் முற்பிறந்தோன் உருவ நலனைக் கண்டு களிப்புறும் நீ, அக் களிப்பு மிகுதியால் அக்கடலின் செயல் காட்டும் சிறந்த அறவுண்மை ஒன்றை அறியத் தவறி விடுதல் கூடாது; ஆராவாரம் செய்து கொண்டே எழும்பிப் பாயும் அக்கடல் அலைகள், தம்மைச் குழந்து நிற்கும் கரை யெல்லையைக் கடந்து போகாது, அடங்கி நிற்பதுபோல், நீயும் குடிப் பிறந்தார்க்கு ஒதிய உலகியல் அறங்களை அழிக்காது, அவற்றிற்கு அடங்கி யொழுகுதல் வேண்டும். காதல் கொண்ட காரிகையைக் கலங்க விடாது வரைந்து கொள்ளச் சொல்கிறது உலகியல் அறம், அவ்வற நெறியை நீ அழித்து விடுதல் கூடாது. அவ்வறத்திற்கு அடங்கி நடத்தலே நினக்கு அழகாம்!” எனக் கூறாமல் கூறுவதுபோல் தோன்றிற்று.

நீல நீர்க் கடலும் வெண்மணற் கரையும் காட்டும் காட்சி நலத்தையும், தோழியின் முகம் காட்டும் கருத்து நலத்தையும், தன் கருத்தில் இருத்தி, இளைஞன் ஏதும் கூற மாட்டாது இருந்து விட்டானாக, மீண்டும் அவளே பேசத் தொடங்கி, "அன்ப! என் ஆருயிர்த் தோழியும் உன் அன்பைக் கவர்ந்த காதலியுமாய இவளை முதன் முதலாகக் கண்ட அன்று, பெண்ணே ! உன்னை என்றும் பிரியேன்! பிரிந்தால் உயிர் வாழேன்! என ஆங்குறையும் கடவுளர் அறிய ஆணையிட்டுக் கூறிய அச்சூளுறவினை அவள் உண்மையென நம்பினாள். பிரியாது வாழ்தல் இயலாது; அதிலும் ஆடவர்க்கு அது அரிதினும் அரிதாம் என்பதை அவள் அன்று அறிந்திலள். உன்பால் அவள் கொண்ட காதல் மயக்கம் அவள் கருத்தை மறைத்து விட்டது; அதனால் உன் ஆணை யொன்றையே நம்பி உன்னை ஏற்றுக் கொண்டாள்; அதனால் இன்று வருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/62&oldid=590139" இலிருந்து மீள்விக்கப்பட்டது