பக்கம்:நெய்தற் கன்னி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ஒ 63

அதனால், பிரிவில்லாய் போலநீ தெய்வத்தின் தெளித்தக்கால், அரிது என்னாள் துணிந்தவள் ஆய்நலம் பெயர்தரப் புரியுளைக் கலிமான் தேர் கடவுபு 20 விரிதண்தார் வியன்மார்ப விரைக நின் செலவே.”

வரையாது பிரிந்து வந்த தலைவனைத் தோழி, தலைவியது ஆற்றாமை கூறி வரைவு கடாயது.

1. ஞாலம் - உலகம்; முதல்வன் - திருமால்; ஈண்டு கண்ணன், முதுமுறை- முன்பிறந்த முறைமை வாய்ந்த 2, தைஇய - உடுத்த, 4. வால் - வெண்மை. எக்கர் - மணல்மேடு சேர்ப்ப - நெய்தல்நிலத்தலைவ! 6. கூரும் - மிகும்; எவ்வம் - வருத்தம். மன் - அது பயனற்றுப் போயிற்று எனப் பொருள்படும். 7. காரிகை பெற்ற - எடுத்துக் காட்ட வல்ல அழகு வாய்ந்த 8. பீர்அலர் அணி - பீர்க்கம் பூவின் அழகு. அதாவது பசலை. 9, இணைபு - ஒன்றுகூடி, எய்யாய் - துயர் அறியாது; 10. புணை - போக்கும் வழி. 11. துணையாருள் தகைபெற்ற - தோழியர் அனைவரினும் அழகு பெற்ற, தொன்னலம் - இயற்கை அழகு. 12. அணி வனப்பு - தொய்யில் முதலாம் செயற்கை அழகு. 16. உக - சொரிய, கலுழும் - அழும். 20. உளை - பிடரிமயிர்; கலிமான் - விரைந்து பாயும் குதிரை. கடவுபு - செலுத்தி. 21. தார் - மாலை அணிந்த வியன் - அகன்ற,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/65&oldid=590142" இலிருந்து மீள்விக்கப்பட்டது