பக்கம்:நெய்தற் கன்னி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

கொடியை நீ கொண்க!

கடல் நாட்டுக் காவலன் மகன் அவன். கடல் வளம் கொழிக்கும் அவன் நாட்டுக் கடற்கரை, புன்னை முதலாம் பன்மரம் நிறைந்து என்றும் தண்ணெனக் குளிர்ந்திருக்கும். அந்நாட்டு அரசிளங்குமரனாய அவன், ஒருநாள், விரைந்த செலவினைத் தம் பிறப்பியல்பாகக் கொண்ட குதிரைமீது இவர்ந்து, கடற் காட்சிகளைக் கண்ணுற்று வந்தவன், இடை வழியில் அழகிய ஒர் இளம் பெண்ணைத் கண்டான். பேதைப் பருவம் கடந்து பெதும்பைப் பருவத்தில் அடியெடுத்து வைக்கும் பருவத்தினளாய அவள் பெருவனப்புடையளாய் விளங்கினாள். கையில் வளைகள்; காலில் மணிச் சிலம்பு; இடையில் அழகிய தழையாடை, ஆகிய இச் செயற்கை அழகுகள், அவள் இயற்கை அழகிற்கு அழகு தந்தன. இத்தகு காட்சி நலம் உடையளாய அவள், பேசுங்கால் படபடக்கப் பேசாது, சிலவே பேசும் பண்பறிந்திருந்தாள். வாயினின்றும் வெளிப்படுவன சில சொற்களே ஆயினும், அவை கேட்கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/66&oldid=590143" இலிருந்து மீள்விக்கப்பட்டது