பக்கம்:நெய்தற் கன்னி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ. 65

கேட்கத் தெவிட்டாத் தீஞ்சுவை உடையவாம். அத்தகையாள் அழகைக் கண்டும், அவள் வழங்கும் மொழியைக் கேட்டும் அவள்பால் உள்ளத்தைப் பறிகொடுத்தான். அவள் காதலைப் பெற ஏங்கி நின்றான்; குதிரை மீது வந்து, தன்னைக் கண்டதும் கருத்தழிந்து நிற்கும் அக் கட்டிளங் காளையை அவளும் கண்டாள்; அவன் பால் அரசிளங் குமரனுக்குரிய தோற்றப் பொலிவினைக் கண்ணுற்ற அவளும் அவன்பால், காதல் கொண்டாள்; இருவர் கருத்தும் ஒன்று படவே, இருவரும் மறையில் மணங் கொள்ளும் கந்தர்வ முறைப்படி கணவனும் மனைவியுமாயினர். அன்று முதல் அவன் அவளைத் தேடி ஆங்கு வருவன்; அவளும் அவனைக் காணும் ஆர்வ மிகுதியால் ஆங்கு வருவள். ஒருவரை யொருவர் காண்பர். களிப்புக் கடலில் மூழ்கி வீடு திரும்புவர். இவ்வழக்கம் வளர்ந்தது; அவர் காதலும் வளர்ந்தது.

இவ்வின்பச் சூழ்நிலையில் நாள் சில கழிந்தன. அது காறும் ஊரார்க்கோ, உடன் ஆடும் தோழியர்க்கோ, உற்றார் பெற்றார்க்கோ தெரியாதிருந்த அவள் காதலை ஊர்ப் பெண்டிர் சிலர் உணர்ந்து கொண்டனர். தாம் கண்டவற்றிற்குக் கண்ணும் காதும் வைத்து ஊர் மன்றில் அம்பலப்படுத்தி விட்டனர். அதனால் தன் பெண்ணின் காதல் விளையாட்டினைக் கண்டு கொண்ட தாய் அவளைக் கண்காணிக்கத் தொடங்கினாள். அதனால், முன்போல், தான் விரும்பும் போதெல்லாம் சென்று காதலனைக் கண்டு மகிழ்வதற்கு இயலாது கலங்கினாள் அப்பெண். காதல் தடையுற்றுப் போவதை அவளால் தாங்கிக் கொள்வது இயலாதாயிற்று. அதனால் அவள்

நெய்தல்-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/67&oldid=590144" இலிருந்து மீள்விக்கப்பட்டது