பக்கம்:நெய்தற் கன்னி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ. 67

அவள் ஆடல் பாடல்களின் போதும், உணவிலும் உறக்கத்திலும் உடன் வாழ்ந்து பழகிய தோழி, அவள் நிலையைக் கண்டாள். அவள் வாழ வேண்டுமாயின், அவர்கள் திருமணம் விரைவில் முடிதல் வேண்டும் என உணர்ந்தாள். உணர்ந்தவள், 'தான் உணர்ந்த இவ்வுண்மையை அவள் காதலன் உணராதிருப்பனோ? அவள் துயரையும், அத்துயர்க்காம் காரணத்தையும், அது தீர்க்கும் வழியையும் அவள் தோழியாம் தொடர்பல்லது வேறு நெருங்கிய உறவில்லாத் தானே அறிந்திருப்புழி, அவள் கருத்தில் இடங்கொண்ட காதலனாய அவன் அறியாதிரான்; அறிந்தே அவன் அவ்வாறு நடந்து கொள்கிறான்; தான் கொண்ட காதல் உறவினைப் பிறர் அறிந்திலர். அதனால் எத்தனை காலம் வேண்டுமாயினும் அக்களவின்பத்தை நுகரலாம்; அதனால் அவள் எவ்வளவு வருந்தினும் கவலை இல்லை என்ற துணிவே அவன் காலம் தாழ்த்துதற்குக் காரணம் போலும். அஃது உண்மையாயின், அவன் அவள்பால் கொண்டிருப்பது உண்மை அன்பாகாது; அத்தகையான் காதற் சிறப் புணராக் கொடியவனாவன்; பண்புடைப் பெரியோன் @了@T மதிக்கத்தக்க மாண்புடையனாகான்! என்றெல்லாம் எண்ணி, அவனை நொந்து கொண்டாள்.

பின்னர் வறிதே நொந்து கொண்டு வாயடைத்துக் கிடப்பின் இவட்கு வாழ்வு கிட்டாது; இவள் அல்லல் அகலாது; ஆதலின் இப்போதே சென்று, அவன் செய்யும் தவறினை, அதனால் இவட்கு நேரும் அழிவினை எடுத்துக் கூறி, அவனைத் திருத்துதல் வேண்டும் எனத் துணிந்தாள். அவள் துணிந்தாளேனும், ஆண்மையும், ஆளும் உரிமையும் பெற்ற அவன் உயர்வும், பெண்மையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/69&oldid=590146" இலிருந்து மீள்விக்கப்பட்டது