பக்கம்:நெய்தற் கன்னி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ 71

“கண்டவர் இல்என உலகத்துள் உணராதார் தங்காது, தகைவுஇன்றித் தாம்செய்யும் வினைகளுள் நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர் நெஞ்சத்துக் குறுகிய கரிஇல்லை ஆகலின், வண்பரி நவின்ற வயமான் செல்வ! நன்கு அதை அறியினும், நயன் இல்லா நாட்டத்தால், அன்பிலை எனவந்து கழறுவல்; ஐய! கேள்.

மகிழ்செய் தேமொழித் தொய்யில்சூழ் இளமுலை முகிழ்செய முள்கிய தொடர்பவள், உண்கண் அவிழ்பனி உறைப்பவும் நல்காது விடுவாய் இமிழ்திரைக் கொண்க: கொடியைகாண் நீ.

இலங்கு ஏர் எல்வளை ஏர்தழை தைஇ நலம்செல நல்கிய தொடர்பவள் சாஅய்ப் புலந்து அழப் புல்லாது விடுவாய்? இலங்குநீர்ச் செர்ப்ப! கொடியைகாண் நீ. இன்மணிச் சிலம்பின், சின்மொழி ஜம்பால் பின்னொடு கெழீஇய தடவர வல்குல் நுண்வரிவாட வாராது விடுவாய் தண்ணந் துறைவ! தகாஅய்காண் நீ.

எனவாங்கு,

அனையள் அன்று அளிமதி, பெரும! நின்இன்று இறைவரை நில்லா வளையள் இவட்கு, இனிப் பிறையேர் சுடர்நநுல் பசலை

மறையச் செல்லும் நீ மணந்தனை விடினே.”

தோழி தலைவனை வரைவு கடாயது.

10

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/73&oldid=590150" இலிருந்து மீள்விக்கப்பட்டது