பக்கம்:நெய்தற் கன்னி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"கணவன் வந்தான்; அவள் துயரம் தீர்ந்தாள். படை வலியற்ற நாட்டைப் பகைவன் கைப்பற்றிக் கொடுங்கோல் நடத்தினான்; படை வலியுடன் அரசன் மீண்டு வந்து பகையைப் போக்கியதும் நாடு நல்வாழ்வு பெற்றது. இது போலிருந்தது அத் தலைவியின் உள்ள மகிழ்ச்சி."

இவ்வாறு, பிரிவின் நிலையைக் காட்டிப் பேசுகிறார் புலலர். அரசியலில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு இதற்குக் காரணமாயிற்று என்று சொல்லலாமல்லவா? “நயனும் வாய்மையும் நன்னர் நடுவும் இவனின் தோன்றிய இவைஎன இரங்கப் புரைதவநாடிப் பொய்தபுத்து இனிதாண்ட அரைசனோடு உடன்மாய்ந்த நல்லூழிச் செல்வம் போல் நிரை கதிர்க் கனலி பாடொடு பகல்செலக் - கல்லாது முதிர்ந்தவன் கண்இல்லா நெஞ்சம் போல் புல்இருள் பரத்தரூஉம், புலம்புகொள் மருள்மாலை.

மாலையின் வரவில்தான் எவ்வளவு அரசியல் தத்துவத்தைப் புலவர் உருவாக்கிக் காட்டுகிறார். பாருங்கள் !

இனித் தலைவியின் உள்ளத்து வேதனையை அவர் எடுத்துக் காட்டும் நயமோ பெரிது உருக்கந் தருவதாகும்.

புல்லி அவன் சிறுது அளித்தக் கால்என்

அல்லல் நெஞ்சம் அடங்கலும் காண்பல்

(5–18–19)

ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ, என் கையறு நெஞ்சம் கனன்று தீ மடுக்கும்! . (8–9–10).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/8&oldid=590085" இலிருந்து மீள்விக்கப்பட்டது