பக்கம்:நெய்தற் கன்னி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ↔ ಆಖಖಗೆ கா. கோவிந்தன்

இவளை, இன்று இவ்வாறு கலங்கப் பண்ணுகின்றனனே என அவன்பால் சினம் கொண்டாள். அவனைக் கண்டு, அவனுக்கு அறிவுரை கூறி, வரைவொடு வரச்செய்தல்

வேண்டும் எனத் துணிந்தாள்.

அத் துணிவோடே அவனைத் தேடிச் சென்றாள். தன்னுர்க் கடற்கரையில் நின்றவாறே, தும்பி முதலாம் தேன் உண்ணும் வண்டுகள் சுற்றிச் சுற்றிப் பறந்து பேரொலி செய்ய மலர்ந்த ஞாழல், புன்னை, தாழை, செருந்தி முதலாம் பன்னிறமும் பன்மணமும் வாய்ந்த மலர்கள் உதிர்ந்து பரவிக் கிடக்கும் மணல் மேடுகள், வெற்றிச் சிறப்பு வாய்ந்த சக்கரப் படை விளங்கும் கையினை உடையோனாய திருமால், மார்பில் பல வண்ண மலர்களால் ஆன வனப்பு மிக்க மாலை அணிந்து கிடப்பதுபோல் தோன்றும் காட்சி இன்பத்தால் கருத்திழந்து நிற்பவனைக் கண்டாள். கடற்கரை மணலும் மலர் மாலை அணிந்து மகிழ்வது போலும் இந்நாளில் இவன் மட்டும் மணமாலை அணியும் மனத்துணிவு இன்றி மடங்கிக் கிடக்கின்றனனே, கடற்கரை மணலில் உதிர்ந்து பரவிக் கிடக்கும் மலர்க்காட்சி, மாலின் மார்பு மாலையை நினைவூட்ட நினைந்து மகிழும் இவன் உள்ளத்தில், தன் மண மாலை பற்றிய நினைவு எழவில்லை போலும்; என்னே இவன் அன்பு!" என எண்ணியவாறே அவனை அணுகினாள்.

அணுகி, அவன் காதலி படும் கடுந்துயரை எடுத்துரைத்து விட்டு, "அன்ப! என் தோழியைக் கண்டு முதன் முதலாகக் காதல் கொண்ட அன்று, அவள்தரும் இன்பத்தை ஆரத் துய்க்கும் வேட்கை மிகுதியால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/84&oldid=590161" இலிருந்து மீள்விக்கப்பட்டது