பக்கம்:நெய்தற் கன்னி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ல் புலவர் கா. கோவிந்தன்

எனவும் எண்ணாது வந்து, நீ குறித்த இடத்தில் நின்னை எதிர்நோக்கியிருந்து நினக்கு இன்பம் அளித்ததன் பயனோ, மூங்கிலை நிகர்த்த அவள் தோள்கள் மெலிந்து, இயல்பாக அணியும் அணிகளையும் தாங்கிக் கொள்ள மாட்டாது தளர்ந்து போகவும், அவள் துதல் ஒளி இழந்து கெடவும் அவள் அங்கே தனியே யிருந்து வருந்த, நீ ஈங்கு வந்து மகிழ்ந்து வாழ்வது?

"அன்ப! நின் செயல் அறமாகாது; கடற்கரை மணல் மேட்டையும், அதன்மீது படிந்து கிடக்கும் பல்வகை மலர்களையும் பார்த்துப் பேரின்ப நிலையுற்ற நீ, இக்காட்சி யின்பத்தையும் காண்பாயாக. தன் கரைகளில் வளர்ந்து தனக்குப் பேரழகு தரும் இவ் விடும்பங் கொடிகள், ஞாயிற்றின் கொடிய கதிர்களால் கருகி அழிந்து விடுமோ என அஞ்சிய இக்கடல் நீர், தன் அலைக் கைகளால் தன்கண் நீரை வாரி இறைத்து வாழ்விக்கச் செய்யும் வனப்பு மிக்க இக்காட்சியைக் காண். இதைக் காணும் உன் உள்ளத்தில், உன்னை அடைந்து, உன்னையும் பேரின்பக் கடலில் ஆழ்த்தித் தானும் பெருமை யடைய வேண்டியவளாய அவள் காதற் கனலால் கருகி விடாவாறு, உன் அன்பெனும் அருள் மழையை ஆரப் பொழிந்து அவளைக் காத்தல் உன் கடமையாம் என்ற உணர்வு எழவில்லையோ? அன்ப! கைவளை கழன்று போமாறு காதல் நோய் அளித்த நீயே, அந்நோயைப் போக்குதலும் வேண்டும்; அதைப் போக்கும் ஆற்றல் உன் ஒருவனுக்கே உண்டு; அன்ப அதை நீ விரைந்து மேற்கொள்ள வேண்டும்!" எனப் பலப்பல கூறி வரைவு கடாயினாள். - *. - * *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/86&oldid=590163" இலிருந்து மீள்விக்கப்பட்டது