பக்கம்:நெய்தற் கன்னி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ 85

"தெரி இணர் ஞாழலும், தேம்கமழ் புன்னையும் - புரிஅவிழ்பூவின் கைதையும், செருந்தியும், - விரிDமிறு இமிர்ந்து ஆர்ப்ப இருந்தும்பி இயைபு ஊதச் செருமிகு நேமியான் தார்போலப் பெருங்கடல் வரிமணல்வாய் குழும் வயங்கு நீர்த்தண் சேர்ப்ப! 5

கொடுங்கழி வளைஇய குன்றுபோல் வால் எக்கர் நடுங்குநோய் தீர நின்குறி வாய்த்தாள் என்பதோ, கடும்பனி அறல் இகு கயலேர்கண் பனி மல்க இடும்பையோடு இணைபு ஏங்க இவளை நீ துறந்ததை?

குறி இன்றிப் பன்னாள் நின் கடுந்திண்தேர் வருபதம்

கண்டு 10 எறிதிரை இமிழ்காணல் எதிர் கொண்டாள் என்பதோ, அறிவு அஞர்உழந்து ஏங்கி ஆய்நலம் வறிதாகச் செறிவளை தோள் ஊற இவளை நீ துறந்ததை?

காண்வர இயன்ற இக்கவின்பெறு பனித்துறை யாமத்து வந்து குறிவாய்த்தாள் என்பதோ, 15 வேய்நலம் இழந்ததோள் விளங்கிழை பொறை யாற்றான் வாள் நுதல் பசப்பூர இவளை நீ துறந்ததை?

அதனால், - இறைவளை நெகிழ்த்த எவ்வநோய் இவள்திர (உரவுக்கதிர் தெறும் என; ஒங்குதிர்ை விரைபு, தன் 20

கரை அமல் அடும்பு அளித்தா அங்கு உரவு நீர்ச் சேர்ப்ப! அருளினை அளியே.”

தோழி, தலைவியது ஆற்றாமை கூறித் தலைவனை வரைவு கடாயது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/87&oldid=590164" இலிருந்து மீள்விக்கப்பட்டது