பக்கம்:நெய்தற் கன்னி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

வழிபட்ட தெய்வம்தான் வலி எனச் சார்ந்தார்கண் கழியும் நோய் கைம்மிக அணங்கியது போல

(15—12–22)

குடிமைக் கண் பெரியதோர் குற்றமாய்க் கிடவாதோ?

வாய்ம்மைக்கண் பெரியதோர் வஞ்சமாய்க் கிடவாதோ?

புகழ்மைக் கண் பெரியதோர் புகராகிக் கிடவாதோ? -

(18)

அழகிலாகின்று அவர் நக்கதன் பயனே வில்லினும் கடிதவர் சொல்லினுள் பிறந்த நோய்! பகைமையிற் கடிதவர் தகைமையின் நலியுநோய்! தீயினும் கடிதவர் சாயலின் கனலும்நோய்! தலைவியைப் போலவே, தலைவன் படும் வேதனைகளும் சற்றும் குறைந்திருக்கவில்லை. -

உப்பியல் பாவை-உறையுற்றது போல உக்குவிடும் என் உயிர்.

நெய்யுள் மெழுகின் நிலையா.நூ பைபயத் தேயும் அளித்தென் உயிர்.

என்றெல்லாம், அதனையும் சுவைபடக் கூறுகிறார் புலவர்.

காமத்தால் உழன்ற ஒரு பெண் ஹிஸ்டீரியா என்ற நோயினால் வருந்தவும் நேரலாம் என்பார்களே, இக்காலத்து அறிவியல் அறிஞர்; அது நம் புலவர் பார்வைக்குந் தப்பவில்லை. அவர் சொல்லுகிறார்:

'-தெருவில் பட்டு ஊண் யாதும் இலள்ஆகி, உயிரினும் சிறந்ததன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/9&oldid=590086" இலிருந்து மீள்விக்கப்பட்டது