பக்கம்:நெய்தற் கன்னி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி , 89

பேரருள் உள்ளம் அவனுக்கு உண்டாகாதே! அவன், ஈண்டு இந்நிலையில் வந்திரான்; அங்ங்னமாகவும், அவன் வந்து அன்பு காட்டி அருள் பாலிக்கப் பெற்றாய்போல் பேரழகு பெற்று விளங்குகின்றனையே! இப் புதுமைக்காம் காரணம் யாதோ?” என வினவினாள். - தன் துயர்நிலை உணர்ந்து வினாவிய தோழியை அப் பெண் அன்போடு அணைத்து அருகில் இருத்திக் கொண்டு, "தோழி! நீ நினைப்பது போலவே, காதலன், நான் காண இவண் வந்திலன். ஆனால் நனவில், நண்பகலில் நாம் அறிய வாராத அவன், இன்று இரவு என் கனவில் வந்தான் ! நனவில் காணப் பெறாத காதலனைக் கனவிற் கண்டதும் களி 'கூர்ந்தது என் உள்ளம். காதலனைக் கண்டதும் அவன் முன் சென்று நின்று, 'அன்ப! என்னை முதன்முதலாகக் கண்ட அன்று, 'அன்பே என் ஆருயிரே! உன்னைப் பிரியேன்! பிரிந்தால் பெருந்துயர் உறுவேன்! அத் துன்பத்தைத் தாங்கிக் கொண்டு உயிர் வாழ மாட்டேன்!” என்று உறுதி உரைத்த நீ, இன்று மறந்து விட்டாய். ஆகவே, அன்று கவர்ந்து கொண்ட என் நலனை என்பால் ஒப்புடைத்துச் செல், எனக் கூறி வழி மறித்து நின்று வழக்காடினேன் போலவும், என் துயர் நிலை கண்ட அவன், அந்நிலையே, அவனைக் காணாமையால் என்னை விட்டுக் கழிந்து போன அழகெல்லாம் மீண்டு வந்து சேர அடையுமாறு என்னை ஆரத் தழுவிக்கொண்டு, பெண்ணே! இனி நின்னை இமைப் பொழுதும் பிரியேன், கலக்கத்தைக் கைவிடு! எனக் கூறி அருள் செய்வான் போலவும், காதலனைக் காணாமுன் கலக்கம் என்பதையே அறியாமையால் கட்டுக்கடங்காது திரிந்து தன் உரிமை நிலைகெட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/91&oldid=590168" இலிருந்து மீள்விக்கப்பட்டது