பக்கம்:நெய்தற் கன்னி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 புலவர் கா. கோவிந்தன்

யாது என் பிழைப்பு என நடுங்கி ஆங்கே 20 பேதையைப் பெரிது எனத் தெளிப்பான் போலவும், ஆங்கு, கனவினால் கண்டேன் தோழி! காண்தகக் கனவில் வந்த கானலம் சேர்ப்பன் நனவில் வருதலும் உண்டு என 25 அனைவரை நின்றது என் அரும்பெறல் உயிரே."

வரைவிடை ஆற்றாது வருந்திய தலைவியது கவின் கண்டு வினாவிய தோழிக்கு, அத் தலைவி தான் கண்ட கனவு நிலை உரைத்தது. - 2. தூக்க - அசைக்க, வணங்கிய - வளைந்த, 5. அளி – அருள் விளியாது - ஓயாது. நரலும் - கூவும். 10. அலந்தாங்கு - பிரிந்தவிடத்து, அமையலென் - வாழேன். 11. தொடுப்பேன் - வாதாடுவேன். 13. புலம்பல் ஒம்பு - வருந்தாதே. மறந்தித்தோய் - மறந்தாய். 18. இறைஞ்சி- வணங்கி, 19. ஊதை - கடற்காற்று வீசும். அலைப்பேன் - அடிப்பேன். அனைவரை - அந்நம்பிக்கையின் எல்லையில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/94&oldid=590171" இலிருந்து மீள்விக்கப்பட்டது