பக்கம்:நெய்தற் கன்னி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

எம்போல் இணைதியோ?

மாலைக் காலம் அது, பகற் பொழுதிற்குக் காரண மாய்ப் பேரொளி வீசிய வெப்பம் மிக்க கதிர்களைத் தன்பால் ஒடுங்கிக் கொண்டு ஞாயிறு மறைந்துவிட்டான். பல்லூழிக் காலமாகப் பயின்று வந்த உலகியல் முறை யெல்லாம் தடுமாறிப் போக, உலகம் ஒடுங்கும் ஊழி முடிவில், உலகில் வாழும் பல கோடி உயிர்கள் அனைத்தையும், அவ்வுயிர்களைப் படைத்த உலக முதல்வன் தன்பால் ஒடுக்கிக் கொள்வது போலும், அஞ் ஞாயிற்றின் மறைவை அடுத்துக், கண்ணும் கருத்தும் மயங்குதற்குக் காரணமாய கார் இருள் வந்து பரவிய நிகழ்ச்சி, தன் நாட்டில் நல்ல அறவாழ்வு நிலைபெறுமாறு நாடாண்டு வந்த அரசன் மாண்டு மறைந்து போனானாக, அவன் பின், தானும் அறமல்லனவே செய்து பழகித் தன்னாட்டையும் அறநெறியில் வாழவிட மாட்டாத அறிவுக் குறைபாடுடையனாய ஒரு கொடுங்கோலன் ஆட்சிப்பீடம் ஏறியதுபோல் தோன்றிற்று. பேரோளி வீசும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/95&oldid=590172" இலிருந்து மீள்விக்கப்பட்டது