பக்கம்:நெய்தற் கன்னி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 இ. புலவர் கா. கோவிந்தன்

விட்டது. இந் நிலையில் வரினும், காதலன் செய்த கொடுமைகள் எல்லாம் மறைந்து போய், அவன் புகழ் உயர்ந்து விடும். ஆனால், அந்தோ! அவன் வந்திலனே என வருந்தி அழும் என் பொருட்டு நீயும் வருந்தி அழுகின்றனையோ? அல்லது, இனியன அளித்த என்னை மறந்து வாழ்வானை நினைந்து வருந்தும் என்போல் நீயும், நின் மனக்கு இனியானை இழந்து வருந்துகின்றனையோ?” என வாய்விட்டுக் கேட்டு வருந்தினாள்.

இவ்வாறு தன் அகத்துறு துயரை அடக்கிக் கொள்ள மாட்டாது வாய்விட்டுப் புலம்புவதால், அவள் களவொழுக்கத்தை அறிந்து கொண்ட அவ்வூர் அம்பல் மகளிர், பலப்பல கூறிப் பழிக்கத் தலைப்பட்டனர். அப்பெண்ணின் உயிர்த்தோழியாய், அவள் மேற்கொண்ட களவொழுக்கத்திற்கு உற்ற துணை புரிந்த தோழி, அவள் துயர் நிலையைக் கண்டு கவலையுற்றாள்; காதல் நோயாலும், களவொழுக்கம் கண்டு ஊர்ப் பெண்டிர் உரைக்கும் அலராலும் அப்பெண்ணிற்கு யாது நேருமோ என அஞ்சினாள். மேலும், அவள் துயர் துடைக்கப் பெறாது மேலும் மேலும் பெருகுமேல் அவளால் அதைத் தாங்கிக் கொள்வது இயலாது; அவள் உயிரிழந்து போவள் என உணர்ந்து, உளம் நொந்து கொண்டாள். அதனால், தம் காதலர்பால் சென்று தம் காதல் நோயைக் கூறல் பெண்டிர்க்கு அழகாகாது என எண்ணி வாயடைத்துக் கிடப்பது கூடாது எனத் துணிந்தாள். அவனுர் அடைந்து அவனைக் கண்டாள். "அன்ப! இவள் காதல் நோய் தாங்கும் அளவில் நில்லாது பெருகி விட்டது. அவள் ஓயாது அழுது கொண்டே உள்ளாள். அதனால் அவள் காதல் ஊரார்க்குப் புலனாகி விட்டது. அவர்கள் அலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/98&oldid=590175" இலிருந்து மீள்விக்கப்பட்டது