பக்கம்:நெய்தற் கன்னி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ 97

கூறி அவளைப் பழிக்கத் தலைப்பட்டு விட்டனர். அவளை இந்நிலையில் விட்டுவைத்தல் ஆகாது. மேலும், அன்ப! தன் இன்ப நுகர்விற்கு இனிய துணை புரிந்தோரைத் துயர் கொள்ளச் செய்வது அறிந்தோர்க்கு அழகாகாது. அவள் துயரை இன்றே போக்குதல் வேண்டும். அதைப் போக்க வல்லனும், போக்க வேண்டியவனும் நீயே, நீ அதைப் போக்கக் கருதாது வாளா கிடப்பின், உன்பால் அறக்குற்றம் வந்து அடையும். அக்குற்றம், ஒருவரைப் பற்றி வருத்தும் நோயின் திறத்தையும், அதைப் போக்கவல்ல மருந்தையும் அறிந்த மருத்துவன், அம்மருந்தை அறியேன் என மறைப்பதால், அம் மருத்துவனுக்கு உண்டாம் கேட்டினும் கொடிதாம். அக் கொடுமைக்குள்ளாவது ஆன்றோர் வழிவந்த உனக்கு ஆகாது. ஆகவே, அன்ப! இன்றே வந்து வரைந்து கொண்டு அவள் இன்னலை அகற்றுவாயாக!” என வேண்டிக் கொண்டாள்.

"தொல்லுழி தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தால் பல்வயின் உயிரெல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான்

(போல் எல்உறு தெறுகதிர் மடங்கித் தன் கதிர்மாய நல்அற நெறி நிறீஇ உலகாண்ட அரசன்பின் அல்லது மலைந்திருந்து அறநெறி நிறுக்கல்லா 5 மெல்லியான் பருவம்போல் மயங்கிருள் தலைவர எல்லைக்கு வரம்பாய இடும்பைசுடர் மருள் மாலை!

பாய்திரை பாடு ஒவாப் பரப்புநீர்ப் பணிக்கடல்! 'தூவறத் துறந்தனன் துறைவன் என்று அவன்திறம் நோய்தெற உழப்பார்கண் இமிழ்தியோ? எம்போலக் 10 காதல் செய்து அகன்றாரை உடையையோ நீ? -

நெய்தல்-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/99&oldid=590176" இலிருந்து மீள்விக்கப்பட்டது