பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

நெருப்புத் தடயங்கள்

தமிழரசியின் முன்னால் நின்று கொண்டாள். “இப்படிப் பட்ட காரியத்த நீ செய்யலாமாம்மா? ஒன்னைச் சொல்லி குற்றமில்ல. ஒன்னை இப்டி... இந்த சண்டாளி மயக்கிட்டா...’ என்று அரற்றிக் கொண்டே நின்றாள்.

அப்பாக்காரர் அருணாசலம், ராஜதுரையை பாதி வழி வரை பலவந்தமாக நகர்த்தியபடி, “வாடா... இனிமேல் நீ ஒருவன்தான் எனக்குப் பிள்ள. எவளும் எப்டியும் போவட்டும்” என்றார். தமிழரசி, தந்தையைப் பார்த்தாள். போகாதிங்கப்பா. நீங்க நினைக்கிறமாதிரி, நான் தப்புத் தண்டா பண்ணல’ என்று, தந்தையை வழி மறித்து, அவர் கால்களைக் கட்டிக் கதறவேண்டும் போலிருந்தது. அதே சமயத்தில், முட்டிகளில் கால் ஊன்றி, எழுந்திருக்க முயன்று, அது முடியாமல் போகவே, தொப்பென்று கீழே விழுந்த சித்தப்பாவையும், ஊமைக்காயங்களே ஊதியபடி, ரத்தக்காயங்களை தொட்டுப் பிதுக்கியபடி கூனிக்குறுகி நின்ற கலாவதியையும் பார்த்தாள். அவளுள், ஏதோ ஒர் ரத்த வாடை ஏற்பட்டு, அது ரத்த பாசத்தை முறியடித்தது. தந்தையைப் பார்த்து, கம்பீர மாகக் கேட்டாள்:

“இப்போ, நான் மட்டும் என்ன. ஒங்களுக்கு மகளாய் பிறந்ததுல சந்தோஷப் படவா செய்யுறேன்? அம்மாவுக்கு, தான் மட்டுந்தான் மகன், தனக்குப் பிறகு யாருமே பிறக்கலன்னு நெனச்சு, தம்பியையும் தம்பி மகளையும் அடிக்க வைக்க, போலீசிற்குப்போன நீங்க, என்ன மகளேன்னு கூப்பிட்டாலும், நான் அப்பான்னு கூப்பிடப்போறதுல்ல.”

அதிர்ந்துபோன அருணாசலம், மகளை அடிப்பதற்காக ஒடப்பார்த்தார். ராஜதுரை அவரைப் பிடித்துக்கொண்டான். பகவதியம்மா ‘அய்யோ... இந்தப்பாவி முண்டையும்...பன்னாடப்பயலும்...என் குடும்பத்தை கலைச்சிட்டாங்களே... சூது வாதில்லாத என் மகளை மயக்கிட்டாங்களே” என்று ஒப்பாரி போட்டாள். அந்த ஒப்பாரியை உள்