பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

நெருப்புத் தடயங்கள்

காரி, என்னை மகளாய் நினைக்கப்படாது...அம்மா என்கிற பாசத்துல நீ ஏதாவது செய்யனுமுன்னால் நீ இங்க இருந்து போறதுதான்’ என்றாள்.

பகவதியம்மாள், மகளை விட்டு விலகி, பாதி தூரம் நடந்தாள். மேல்கொண்டு அவளால் நடக்கமுடியவில்லை. திண்ணையில் போய் சாய்ந்து கொண்டாள். அந்தச் சமயத்தில், அவளே அதற்கு மேல் அதட்டக்கூடாது என்று நினைத்தவர்போல், அருணாசலம், ராஜதுரையுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.

சப்-இன்ஸ்பெக்டர், தமிழரசியை இளக்காரமாகப் பார்த்தார். அவருக்கு, இப்படி ஒரு பெண்ணைப் பார்த்தது ஒரு ஆச்சரியம். அவளுக்கு, தனது மேலதிகாரிகள் தெரிந்திருப்பதில் ஒரு பயம். பக்குவமாகக் கேட்கலாமா. இல்ல...கடத்தல் குற்றத்திற்கு ஏற்றபடி பேசலாமா? அவர் சிந்திக்கத் துவங்கினர். இவள் முந்து முன்னால், நாம் முந்திக்கொள்ள வேண்டும். அதுதான் புத்திசாலித் தனம்...இவள், பெரிய போலீஸ் அதிகாரிகளிடம் ஒரு வேளை புகார் செய்யப்போனால், அதற்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டும்!”

சப், யோசித்தபோது, முத்துலிங்கம் மீண்டும் திடீரென்று கூவினார்: .

“சார்! என் தங்கச்சியை கடத்துனவள் இவள்தான். நீங்க இப்போ என்ன செய்யப் போறீங்க?”

சப்-இன்ஸ்பெக்டர் அமைதியாகப் பதிலளித்தார்:

“கொஞ்சநேரம் சும்மா இருங்க சார். இவங்க படிச்ச வங்க. அந்தப் பொண்ணு மாதிரி முரண்டு பிடிக்க மாட்டாங்க. வினைதீர்த்தான் எங்கே இருக்கான்னு சொல்விடு வாங்க. இல்லன்னால் நான் ஆக்க்ஷன் எடுக்கத்தான் போறேன். ‘

தமிழரசி சீறினாள்: