பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

91

"இந்த ஏழைகள் மேல எடுத்த ஆக்க்ஷனுக்கு, மொதல்ல பதில் சொல்லுங்க. அப்புறம், எடுக்கப்போற. ஆக்க்ஷனைப்பற்றி யோசிக்கலாம்.’

சப்-இன்ஸ்பெக்டருக்குக் கோபம் வந்தது.

"மேடம்,நீங்க லிமிட் தாண்டுறீங்க. எங்க ஆக்க்ஷனுக்கு எப்டி பதில் சொல்லணுமுன்னு எங்களுக்குத் தெரியும். இப்போ நீங்கதான் ஏதோ கவர்மெண்ட் மாதிரி கத்தாதீங்க. இப்போ நீங்க என் முன்னால ஒரு அக்கூஸ்ட். நான் புலன் விசாரணை செய்ய வந்திருக்கிற ஒரு அதிகாரி. பிளீஸ் ... டெல்மி ... பொன்மணியும் வினைதீர்த்தானும் எங்கே இருக்காங்க? அவன், அவளை ஒரு வேளை கொலை செய்யு முன்னால, எனக்குத் தெரிஞ்சாகணும். பொன்மணியை நீங்கதானே கடத்துனீங்க?”

போலீசாருக்குப் பயந்து போய் ஒடுங்கி நின்ற முத்துமாரிப் பாட்டியால், பொறுக்க முடியவில்லை. குறுக்கிட்டாள்.

போலீஸ் எசமான்...ஒமக்கு இது அடுக்காது. தமிழரசிய மிரட்டாதேயும். தமிழரசிக்குத் தெரியு. முன்னாலயே அதுக ஜோடி சேர்ந்துட்டு. இதை நானே பல தடவ என் கண்ணால பார்த்திருக்கேன்.”

‘ஏய் கிழவி! நீ சும்மா இருக்க மாட்டே...? மேடம், என் கேள்விக்கு இன்னும் நீங்க பதில் சொல்லல...’

‘நான் பொன்மணியைக் கடத்தல. அப்படி ஒரு சந்தர்ப்பத்தை அவள் கொடுக்கல. அதோட வினைதீர்த்தானும் அவளைக் கடத்தல-’’

எப்டி?”

  • மைனர் பெண்ணைக் கூட்டிச் சென்றால்தான் கடத்தல். பொன்மணிக்கு இப்போ பத்தொன்பது வயசு முடியப் போவுது. வேணுமானல் பள்ளிக்கூடத்து ரிக்கார்ட்