பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

நெருப்புத் தடயங்கள்

சையோ, கிராம அதிகாரியோட ரிக்கார்ட்சையோ செக்கப் பண்ணுங்க. அவள் மைனர் பெண்ணல்ல. வினைதீர்த்தானோடு அவள் மனப்பூர்வமாய் போயிருக்காள். வினைதீர்த்தானுக்கு அவள் மேல்தான் ஆசையே தவிர, அவள் மேல் இருந்த நகைங்க மீதல்ல. பொன்மணி, காதுல போட்டிருந்த கம்மலைக்கூட கழட்டி வச்சுட்டுப் போயிருக்காள். மிஸ்டர் முத்துலிங்கத்திடம் உண்டா இல்லியான்னு கேட்டுப் பாருங்க...”

"எப்டியோ பாதி உண்மையை ஒத்துக்கிட்டிங்க. இப்போ. அவங்க எங்கே இருக்காங்கன்னு சொல்லிட்டிங்கன்னால் எல்லாருக்கும் நல்லது. அதாவது ஒங்களுக்கும்...’

"அவங்க இருக்கிற இடத்தை... நீங்களும் கண்டு பிடிக்கப் பாருங்க. நானும் பார்க்கிறேன். அவங்களை எப்போ பார்க்கலாமுன்னு எனக்கும் ஆசையாய் இருக்கு...’

சப்-இன்ஸ்பெக்டருக்கு, கோபம் போலீஸ்தனமாக வந்தது. இப்போது அதட்டினர்.

‘ஆல்ரைட்...நீங்க சொன்னதை ஒரு ஸ்டேட்மென்டாய் கொடுங்க...”*

“மொதல்ல...மிஸ்டர் முத்துலிங்கத்திடம் புகார் மனுவை வாங்குங்க. அப்புறம் என்கிட்ட அபிஷியலாய் கேளுங்க...”

"கேட்கத்தான் போறேன். இந்தாய்யா-அந்தப் பொண்ணு-ஏய் . ஒன் பேரு என்ன- கலாவதியா? .. ஆம். கலாவதியையும், அந்தக் கிழவனையும் பிடிச்சு வண்டிக்குள்ள தூக்கிப் போடுங்க. ஸ்டேஷன்ல விசாரிக்கிற விதமாய் விசாரிக்கலாம்...”

போலீஸ்காரர்கள், தமிழரசியைப் பார்த்தபடி, கலாவதியையும், மாடக்கண்ணுவையும் நெருங்கப் போனார்கள். அவர்களோ பயந்துபோய் தமிழரசியை நெருங்கினார்கள். தமிழரசி, இடுப்புச் சேலையை இறுக்கிக்