பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

93

கொண்டான். விழுந்த கொண்டையை போட்டுக் கொண்டாள்.

"இன்னும்கூட ஒங்களுக்கு மனசாட்சி வரலியே? இன்னோருத்தன் வீட்ல வாழப்போற பெண்ணே பகிரங்கமாய் அவமானப் படுத்துறது மாதிரி அடிச்சிட்டிங்க. இது கற்பழிப்பைவிட மோசமானது. கற்பழிப்பாவது, வெளில தெரியாமல் போயிடலாம். ஆனால் ஒரு ஏழைப் பெண் பிரஜையை கண்ட கண்ட இடத்துலல்லாம் அடிச்சு, அவளோட 'டிக்னிட்டியை’ போக்கிட்டிங்க. இது போதாதுன்னு போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூப்பிடுறீங்களா? ஒங்க புலன் விசாரணையைப்பற்றி எங்களுக்குத் தெரியாதா? ஏழை பாளைகளுடைய... கண், காது, மூக்கு முதலிய ஐம்புலன்களையும்...லத்திக் கம்பால விசாரிக்கிறதைத்தான் நீங்க புலன் விசாரணைன்னு சொல்றீங்க...”

“எங்கேயோ ஒரு ஊர்ல போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராய் இருக்கிற இதோ மிஸ்டர் தாமோதரன், தன்னோட குடும்ப விவகாரத்திற்காக ஒங்களைப் பயன்படுத்தி இருக்கார். நீங்களும் அவர் பேச்சுக்குப் பம்பரமாய் ஆடியிருக்கீங்க. இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம். தாய்க்குலம் என்று எல்லாக் கட்சிகளும் பேசுற இந்தக் காலத்துல, ஒரு ஏழைப் பெண்ணை...முண்டைன்னு வேற திட்டியிருக்கீங்க. ஊர் வம்புக்குப் போகாத இந்த அப்பாவி மனிதரை, எப்படி அடிச்சிருக்கீங்க பார்த்தீங்களா? கிராமத்துல ஒருவர் அடிபட்டால், அது மரண தண்டனையை விட மோசமான தண்டனை. இவ்வளவு அநியாயத்தையும் செய்துட்டு, அது நடக்காதது மாதிரியும், நான் செய்யாத ஒன்றை நானே நடத்துனது மாதிரியும் ஜோடிக்கிறீங்க. காலம் மாறிட்டு சார். போலீஸ்காரங்க ஏழைங்க பக்கம் நிற்க வேண்டிய காலம் வருது சார். நாங்க... இப்போ டி. ஐ. ஜி. கிட்ட ஒங்க மேலேயும்...ஒங்க சப்-இன்ஸ்பெக்டர் சகா மிஸ்டர்