பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

நெருப்புத் தடயங்கள்

தாமோதரன் மேலேயும், கிரிமினல் கம்ப்ளெயிண்ட் கொடுக்கப் போறோம். ஒங்க நடவடிக்கைகளுக்குப் பழி வாங்கிக் காட்டாவிட்டாலும், பதில் வாங்கிக் காட்டப் போறோம். நீங்க ரெண்டு பேருமே... இப்பவே ...வேற வேலைக்கு ஏற்பாடு செய்துக்கங்க, எந்த லாக்கப்புல ஏழை பாளைகளை இழுத்துப் பூட்டுவீங்களோ, அந்த லாக்கப்பில இருந்து பழகிக்கிங்க, சித்தப்பா!! எழுந் திருங்க... ஏய். கலாவதி நடடி... இந்தக் கூட்டத்துல, அக்கிரமத்திற்கு அடிபணியக் கூடாதுன்னு நினைக்கிற யார் வேணுமுன்னாலும் வரலாம். முடியுமுன்னால் .. எங்களைத் தடுங்க பார்க்கலாம்...”

கூட்டம் வேகப்பட்டது. “புறப்படுங்க...புறப்படுங்க... இவங்க யாரை வேண்டுமானாலும் நினைச்சால் அடிக்கலாம் என்கிற காலத்தை மாற்றிக் காட்டணும்’ என்ற அர்த்தத்தில், கெட்ட வார்த்தைகளாய் தங்கள் கருத்துகளைச் சொல்லிக் கொண்டு, முண்டியடித்தது. முணுமுணுப்புக்கள், வெடிப்புக்களாய் ஆகிக் கொண்டிருந்தன.

சப்.இன்ஸ்பெக்டரையே பார்த்த போலீஸ்காரர்களுக்கு, அவரைப் போலவே முகங்கள் கூம்பின. தமிழரசியை அண்ணாந்து பார்த்தார்கள். இதற்கு முன்பு தாங்கள் சந்தித்த தலைவர்களையும், மனதில் வரித்துப் பார்த்தார்கள். நேற்று, தமிழரசி செல்வாக்குள்ளவள் என்று முத்துலிங்கம், தன் தரப்பை வலுவாக்குவதற்காகச் சொன்னது, இப்போது பூதாகாரமாய்த் தோன்றியது. அழகாகத் தென்படும் இந்த தமிழரசி, இப்போது, நினைத்த போதெல்லாம் அகோர வடிவெடுக்கும் ஆதிபராசக்தி போல் தோன்றியது. இந்த இக்கட்டான தருணத்தில் சப்-இன்ஸ்பெக்டர், தாமோதரனையே நம்பியிருப்பது போல், அவனையே பார்த்தார். அவனோ தலைகுனிந்து நின்றான். அவன் பார்வையில் படாமல் இருக்க, நகர்ந்து