பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

நெருப்புத் தடயங்கள்

“நான் வர்ல...வர்ல... என்னால யாரோட வேலையும் போயிடப்படாது. “தாமுத்தான்’ என்னல கஷ்டப்படப் படாது. என்னால ஒன்னோட வாழ்க்கை போயிடப்படாது. ஒன்னை...நீ அழிச்சுக்க ஒனக்கு சம்மதமாய் இருக்கலாம். ஆனால் எனக்கு சம்மதமில்ல. எப்பா! ஒமக்கு மூளை இருக்குதா? நான் நடக்கும்போது நீரு ஏன் நடக்கியரு? நம்ம ராசாத்தி தமிழோட வாழ்வு என்னாவுமுன்னு நெனச்சிப் பார்த்தீரா? என் ராசாத்தி! என் தமிழு! என் உடன் பிறப்பே! ஆயிரம் பேர் என்னை ஆயிரம் சொல்லட்டும். ஆயிரம் அடிக்கட்டும். நீ ஒருத்தி, அந்த நொறுங்குவான் செய்த காரியத்துக்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லன்னு நெனச்சா, அதுவே எங்களுக்கு ஆயிரம் யானைப் பலம். நான் வர்ல... வர்ல...”

ரத்தம் சொட்டிய கலாவதி, மார்பில் புரண்டதால், பச்சை ஜாக்கெட்டிற்கு சிவப்புக் கறை போட்டதுபோல் தோன்றிய தமிழரசி, அவள் அவலத்தை உள்வாங்கி இடி முழக்கம் செய்தாள்.

‘நடடி! நீ வர மறுத்தாலும், ஒன்னே தூக்கிட்டுப் போக முடியும்...”

கலாவதி, கண்ணகியாகாமல், அன்பினில் நெக்குருகும் அப்பாவிக் கிராமப் பெண்ணாக முறையிட்டாள் :

“நான் வர்ல, வர்ல... அப்படியே நீ என்னை வலுக்கட்டாயமாய் கூட்டிக்கிட்டு போனலும், போலீஸ் அதிகாரி கிட்ட, இவங்க அடிச்சதாய் சொல்ல மாட்டேன். நானும், அப்பாவும் கீழே விழுந்துட்டோம். விழுகிற இடத்துல பனை ஒலையோட கறுக்கு மட்டைங்க கிழிச்சுட்டு’ன்னு பொய் சொல்லுவேன். சத்தியமாய் பொய் சொல்லுவேன். நான் வர்ல. வரமாட்டேன். அப்பாவையும்வர விடமாட்டேன்...”

தமிழரசி, தன் மார்பில் புரண்ட கலாவதியின் தலையை நிமிர்த்தி, அவள் கண்களைத் துடைத்தாள். எதுவும்