பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

103

முத்துமாரிப் பாட்டியின் ஒத்தடத்தையே பார்த்துக் கொண்டு இருந்த தமிழரசி, போலீசாரை, அவ்வளவு எளிதாக விட்டிருக்கக் கூடாது என்ற குற்றவுணர்வில் அல்லா டினாள். தற்காலிகமாகவோ அல்லது நிரந்தர மாகவோ காதலில் இருந்து மறக்கடிக்கப்பட்ட தாமோ தரனே, கலாவதி நினைவுபடுத்தியதால், தானும் அவன் காதல் ஆளுகைக்கு உட்பட்டு, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இணங்கியிருக்கலாமோ என்று வெட்கப் பட்டாள். இன்னும் அவர்கள் காயங்கள் போல், அவள் மனம் ஆறவில்லை அதே சமயம், தாமோதரன் கூனிக் குறுகி நின்றதும் பிறகு திரும்பிப் பாராமலே ஒடியதும், அவள் மனதில் ஓடாமலே நின்றது.

நேரம், மனோவேகமாய் ஒடிக்கொண்டிருந்தது.

தமிழரசி, தங்களுடன் இருக்கிறாள் என்ற உணர்வு இல்லாமலே, கலாவதி, அடுப்பங்கரைப் பக்கம் முடங்கிக் கொண்டாள். வலது கையை மடித்து தலையை அதில் வைத்து, தலைமுழுவதையும் முந்தானையில் மூடிப்படுத்தாள். அவள் கண்களில் திரண்ட நீர்த்திவலைகள், ஆலங்கட்டி மழைபோல் கை வெளிக்குள் விழுந்து கொண்டிருந்தன.

“கட்டுலுல படும்மா...” என்ற குரல் கேட்டு நிமிர்ந்த தமிழரசி, சித்தப்பா, அவளுக்காக ஒரு சேலையை மடித்து ‘பெட்டாகப்’ போட்டிருப்பதைப் பார்த்தாள். அவர், கட்டில் பக்கம் முடங்கப் போனார், அவள் கட்டிலில் படுப்பது வரைக்கும் தான் முடங்கப் போவதில்லை என்பதைப் போல் அவளே ஏகாறி போல் பார்த்தார். அவருக்காக தமிழரசி, கட்டிலுக்கு வந்தாள்.

“எக்கா... எக்கா” என்ற சத்தம் கேட்டு கண் விழித்த தமிழரசி, தனது வீட்டு வேலைக்காரச் சிறுவன் நிற்பதைப் பார்த்தாள்.

“என்னடா?”