பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

நெருப்புத் தடயங்கள்

தமிழரசி பெருமிதத்துடனேயே தன்னையே பார்த்துக் கொண்டு நின்றாள். தானே அங்கே நில்லாததுபோல் பாவித்தபடி நின்றாள்.

அப்பாக்காரர், மனைவியின் தலையில் இரண்டடி அடித்துவிட்டு, “என்னை விடுடி! அவளை இங்கேயே குழி வெட்டிப் புதைக்கப் போறேன்” என்று கூச்சலிட்டபடியே துள்ளினார். உடனே பகவதியம்மா “நம்ம எல்லாத்துக்கும் சேர்த்துத்தான் ஒம்ம தங்கத் தம்பி மவன் பெரிய குழியாய் வெட்டிட்டானே. அவள விடுங்க. எம்மா தமிழரசி, நீயுந்தான் அந்தப் பக்கமாய் போயேன். ஏன் திமிர் பிடிச்சு நிக்கிறே?” என்று தன் பேச்சை கணவனுக்கும், மகளுக்கும் பாகப் பிரிவினை செய்து கொண்டிருந்தாள்.

ஆனால் தமிழரசி, நகரவும் இல்லை. அருணாசலம் அசையாமலும் இல்லை. மகள் அடிப்பட்டு விடக்கூடாது என்ற ஒரே ஒரு குறிக்கோளுடன் “அய்யோ... கடவுளே... கடவுளே” என்று வெளியாருக்குக் கேட்க முடியாத அளவிற்கு, கேட்கக்கூடாத அளவிற்கு, பகவதியம்மா ஒப்பாரி போட்டாள். பிறகு ஒப்பாரியை நிறுத்தி, ‘தம்’ பிடித்து கணவனைக் குண்டுக் கட்டாகத் துாக்கி, வராண்டாவிற்குக் கொண்டு வந்தாள். அப்போதும் மனைவியை கீழே தள்ளிவிட்டு, பாயத் தயாரான கணவனைப் பார்த்து “நம்ம அப்பா நம்மை அடிக்க மாட்டார் என்கிற தைரியத்துல அவள் நிற்கிறாள். அவளைப்போய் அடிக்கப் போறீராக்கும்” என்று பிடியை விடாமலே, பகவதியம்மா பேசிய போது, அருணசலம் மகளைப் பார்த்தார். அது கலக்கத்தைக் காட்டாமல் கல்லைக் காட்டியது. உடனே அப்பாக்காரர் “செறுக்கி மவளுக்கு என்னை மாதிரியே குணம்” என்று தனக்குள்ளேயே பேசியபடி கைகால்களை ஆட்டாமல் நின்றார். அப்படியும் பிடியை விடாத “பிடி”யை (அதாவது பெண் யானையை)ப் பார்த்து, என்னை விடுடி. நான் எவளையும் அடிக்கப் போகல. எங்கேயாவது ஒடிப்