பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

நெருப்புத் தடயங்கள்

“ எப்டியாவது இந்த வீடு நாசமாய் போவட்டும் . போவட்டும் என்ன போவட்டும்? போயிட்டுது” என்று சொன்னபடியே, எங்கேயோ புறப்படப் போனார். அப்போது-

தாமோதரனின் சித்தப்பா மகன்-அன்று நிச்சய தாம்பூல வீட்டில், தாமோதரனின் கிசுகிசுவை காதில் வாங்கியபடியே, தமிழரசியை கிண்டல் செய்தானே, அதே இளைஞன் அங்கே தலைகுனிந்து வந்தான். முற்றத்தில் நின்றபடி தமிழரசியை கோபமாகவும், மற்றவர்களை அனுதாபமாகவும் பார்த்தான். சிறிது நேரம் வாயாடாது நின்றுவிட்டு, வந்த காரியத்தை தலையை நிமிர்த்தாமலே ஒப்புவித்தான்.

“எங்க பெரியப்பா மகன் முத்துலிங்கண்ணன் ஒரு விஷயத்தை சொல்லிட்டு வரச் சொன்னான். விஜயாவுக்கும், ராஜதுரை மச்சானுக்கும் நடந்த நிச்சய தாம்பூலம் வெறும் தாம்பூலமாய் போயிட்டு. இவ்வளவு நடந்த பிறகு...ஒங்க மகளே எதிரியான பிறகு... இந்தக் கல்யாணம் நடந்தால் ஊர்ல நாலு பேர் சிரிப்பாங்களாம்... அதனால நீங்க வேற இடத்துல பொண்ணு பார்த்துக்கலாமுன்னு முத்துலிங்கம் அண்ணன் ஒங்ககிட்ட என்ன சொல்லிடச் சொன்னான். இதுக்குத்தான் பொம்பிளைங்களை அதிகமாய் படிக்க வைக்கக்கூடாது என்கிறது. நான் வாறேன்.”

அந்த இளைஞன், எதோ பேசப்போன அருணுசலத்திற்கு காது கொடுக்காமலே, தமிழரசியை மீண்டும் ஒரு முறைப்பு முறைத்துவிட்டுப் போய் விட்டான். போகிறவனின் முதுகையே பார்த்துக்கொண்டு நின்ற குடும்பத்தினர், எதிர்பாராத அழுகை ஒலி கேட்டுத் திரும்பினர்கள். ராஜதுரை, “எய்யோ... எம்மோ... எப்டில்லாமோ நினைச்ச நான், இப்டில்லாம் நடக்குமுன்னு நினைக்கலியே. இனிமேல், நான் ஊர்ல எப்டி தலைகாட்டுறது? மருந்தை குடிச்சிட்டு