பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

109

சாகப் போறேன். இவ்வளவு நடந்த பிறகு, இனிமேல் இருக்க மாட்டேன். மாட்டவே மாட்டேன்” என்று சத்தம் போட்டுக் கத்தி, தன் தலைமுடியைப் பிய்த்துப்பிய்த்து ஆட்டினான். நாற்காலிச் சட்டத்தில் தலையை இரண்டு மூன்று தடவை முட்டிக் கொண்டான். பகவதியம்மா கைகளை நெறித்தபடியே பேச்சற்று நின்றாள். பிறகு அவளும் தன் மகனை மார்போடு சேர்த்து அணைத்த படியே அழுதாள். மகனே கண் கலங்கப் பார்த்த அருணாசலம், மகளை கண் கொதிக்கப் பார்த்துவிட்டு, உடன் பிறந்தே கொல்லும் நோய் மாதிரி ஆயிட்டியேழா ... சண்டாளி! இனிமேல் நான் அப்பனும் இல்ல, நீ மகளும் இல்ல! ஒரு நொடிகூட இந்த வீட்ல இருக்கப்படாது” என்றார்.

தமிழரசி அழுகின்ற அண்ணனையும், அழ வைக்கும் அப்பாவையும் ஒருசேரப் பார்த்தாள். குழந்தைக்குக் குழந்தையாய் அழுத தமையனைப் பார்த்ததும், அவள் தலை தானாகக் கவிழ்ந்தது. விஜயாவும், அண்ணனும், இலை மறைவு காய்மறைவாகப் பேசிக் கொண்டதாகக் கூட முத்துமாரிப்பாட்டி சொல்லியிருக்கிறாள். மனத்துள் நினைத்தவளை, மனத்துள் நினைத்துப் பார்க்கவோ நிறுத்திப் பார்க்கவோ முடியவில்லையானால் அதைவிட ஒருவனுக்கு என்ன கேடு வேண்டும். நான் ஒருத்தி பட்டது போதும். இவன் படக்கூடாது. துளிர்க்கவேண்டும். காதலித்தவளைக் கூட தங்கைக்கு சம்மதம் என்றால்தான் கைப்பிடிப்பேன் என்ற அண்ணாவாச்சே.

தமிழரசியின் மனத்துள் திடீரென்று ஒரு முடிவு. ஏற்பட்டது. எப்படியோ நடந்தது நடந்து போச்சு. அது நடக்க வேண்டிய நல்லதை ஏன் தடுக்க வேண்டும்? வினை தீர்த்தான்-பொன்மணி விவகாரம், ராஜதுரை- விஜயா திருமணத்தை ஏன் விகாரப் படுத்த வேண்டும்? பெண் வீட்டாருக்கு எதிரியாய்ப்போன நானே போனால், அவர்