பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

நெருப்புத் தடயங்கள்

களுக்கு ஒரு வெற்றி மனப்பான்மையும் ஏற்படும். நிறுத்தப் பட்ட கல்யாணமும் நடைபெறலாம். நான் ஏன் இந்த விஷயத்தில் பெருந்தன்மையாக நடக்கக் கூடாது? ஆயிரம் நல்ல தன்மைகளில் முக்கிய தன்மை பெருந்தன்மைதானே!”

தமிழரசி எழுந்தாள். கலைந்த முடியை கொண்டையாக்கிக் கொண்டு நடக்கப் போனாள். உடனே மகனை விட்டு விட்டு, மகளை குறுக்காக வழிமறித்த அம்மாவிடம், “எங்கேயும் போகலம்மா. பெண்வீட்டுக்காரங்க கிட்டே நான் பேசிப் பார்க்கலாமுன்னு போறேன். மொதல்ல, அண்ணனை சமாதானப்படுத்து. நான் நல்ல செய்தியோடு வாறேன்” என்று நடந்தபடியே சொன்னாள்.

பாதப் பெருவிரல்கள் மட்டுமே கண்களில் படும்படி, விழிகளை வேறு பக்கம் செலுத்தாமல் கால்களை செலுத்திக் கொண்டிருந்த தமிழரசி, தாமோதரன் வீட்டுக்கு முன்னால் வந்த பிறகுதான் தலையை நிமிர்த்தினாள். அங்கே திட்டுத் திட்டாய் நின்று திட்டிக்கொண்டிருந்த ஆட்கள் அவளை அதிசயித்துப் பார்த்தார்கள். நம்ப முடியாத ஒன்றை நம்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானவர்கள் போல், ஒருவருடன் ஒருவர் கண்களால் பேசிக் கொண்டார்கள். “இவளுக்கு நம்ம தாமோதரனைப் பார்க்காம இருக்க முடியாது” என்று ஒருவர் கிசுகிசுப்பாய் பேசுவதும், தமிழரசிக்குக் கேட்டது. எதையும் எவரையும் சட்டை செய்யாமல், அவள், தாமோதரன் வீட்டுக்குள் நுழைந்த போது-

‘அரங்கு’ வீட்டில், மார்வாடிப் பலகை ஒன்றின் மேல், ஏதோ ஒரு காகிதத்தில் எதையோ வேக வேகமாய் முத்துலிங்கம் எழுதிக் கொண்டிருந்தார். தாமோதரன் தன் சூட்கேஸிற்குள் ஆடைகளை அலங்கோலமாகத் திணித்துக் கொண்டிருந்தான். ‘தம்பி தம்பின்னு ஒன்னை தலையில் வச்சு குதிச்சேன். நீ என்னடான்னால் என் தலையையே குனிய வைக்கிறது மாதிரி பேசுறே! நீ அவளோட,