பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

111

காசியாபிள்ளை கிணத்துல விளையாடுனே; அவள் ஒன்கிட்ட விளையாடுனது போதாதுன்னு, பொன்மணிகிட்டேயும் விளையாடிட்டாள்...” என்று கத்திவிட்டு, மீண்டும் பேனாவை பயங்கரமாய் உதறியபடியே எழுதுவதைத் தொடர்ந்தார். அண்ணனுக்கு ஆறுதலாகவோ அல்லது அமுக்கலாகவோ பதிலளிக்கப் போன தாமோதரன், தமிழரசியைப் பார்த்து, அவளை ஆச்சரியம் பொங்கப் பார்த்தான். பிறகு அமைதியாக வாங்க... தமிழரசி... உட்காருங்க... எண்ணா... யார் வந்திருக்காங்க பாரு” என்றான்.

தமிழரசி நிற்க முடியாமல் நின்று, தாமோதரனை நேருக்கு நேராகப் பார்த்தாள். கொலையுண்ட பல பிணங்களைப் பார்த்துப் பழகிப் போன அவன் முகமோ, பிணக்களையுடன் இருந்தது. ‘இங்க’ போடுறாரே . இதுக்காகவா இங்க வந்தேன்? இதைவிட அவரே என் கன்னத்தில் நாலு அறை போட்டிருக்கலாம்...

முத்துலிங்கம், அவளை ஆவேசமாகப் பார்த்தார். சமையலறைக்குள் அடுப்பைக் குடைந்து கொண்டிருந்த அவர் மனேவி கனகம், அகப்பையுடன் வாசலில் வந்து நின்றாள். அங்கே அவளுக்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்த விஜயா, இரண்டு வகையிலும் அண்ணியாகப் போற தாய் நினைத்தவளை, வில்லியாக நினைத்தோ அல்லது வெறுமையாக நினைத்தோ தொப்பென்று தரையில் உட்கார்ந்து தலையில் கை வைத்துக் கொண்டாள்.

தமிழரசி, அங்கே நில்லாததுபோல் பாவனைகள். தாமோதரன் சூட்கேஸை பூட்டிக் கொண்டிருந்தான். மனத்தின் உணர்வுகளைப்போல் துணிகள் அலங்கோலமாய் வைக்கப்பட்டிருந்ததால், அவன் இதயத்தைப்போல் அந்தப் பெட்டியும் மூட மறுத்து வம்பு செய்தது. அவன் மீண்டும் சூட்கேஸைத் திறந்தான். முத்துலிங்கம் எழுதுவதை