பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

நெருப்புத் தடயங்கள்


துரை, அடியற்ற மரம் போலவும் சோர்ந்து கிடந்தார்கள் தமிழரசியைப் பார்த்தாலும், அவளை ஏறெடுத்தும் பார்க்க வில்லை. என்ன ஆச்சு என்று கேட்கவும் இல்லை.

தமிழரசி, உள்ளறைக்குள் போய், கொடியில் தொங்கிய புடவைகளை மடித்து, சூட்கேஸிற்குள் திணித் தாள். அப்போது, தாமோதரனும் அப்படிச் செய்தது, அவளுக்கு நினைவுக்கு வந்தது. இந்நேரம் புறப்பட்டாலும் புறப்பட்டிருப்பார்! இரண்டாக மடித்த புடவை ஒன்றை, நான்காக மடிக்காமல், விரித்த கரத்தை சுருக்காமல், பிரித்த வாயை மூடாமல், கண்களை மூடி, அவற்றை தானகப் பார்த்துக் கொண்டாள்.

மூடப்பட்ட கண்களுக்குள் காசியாபிள்ளை கிணற்று மேடும், தாமோதரன் தன் முகத்தை கரங்களில் ஏந்தியதும், கலாவதி பதனீர் கொண்டு வந்ததும் நிழல் படங்களாய் வந்தன. முதலில் கருப்புக் கருப்பாய் வந்த காட்சிகள்-அப்புறம் சிவப்புச் சிவப்பாய், நீலமாய், பச்சையாய், பவள மாய், பல்வேறு வண்ணக் கலவையாகி, மீண்டும் கருப்புக் கருப்பாய் மாறி, கண்ணிருட்டில். கரைந்தன.

தமிழரசி, கண்களைத் திறந்தாள். எல்லாமே சூன்ய: மாய், வெட்ட வெளியாய் தோன்றின. திறந்த கண்களில், தோன்றாத காட்சிகள், மூடிய கண்களில் எப்படி கலர் கலராய் வருகின்றன? இதல்ைதான் மனக்கண் புறக் கண்ணை விட மகத்தானது என்று யோகிகள் சொல் கிறார்களோ... இந்தச் சமயத்தில், இப்படிப்பட்ட ஒரு நினைப்பு வருகிறதே என்று தன்னைத்தானே எள்ளி, நகை யாடியவள்போல், வெறுமையாகச் சிரித்தாள். மீண்டும் இனந்தெரியாத சோக சுகப் போதையில் மூழ்குவதற்காக கண்களை மூடப்போனவள், அவற்றைப் பலவந்தமாகத் திறந்து வைத்துக் கொண்டாள். தன்னைத்தானே நிர்த்தர்ட்சண்யமாகக் கேட்டுக் கொண்டாள்.