பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

நெருப்புத் தடயங்கள்

முத்துமாரிப் பாட்டி, தமிழரசியை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. மீண்டும் கற்களை எடுத்து, அதே பனை மரத்தில் எறிந்தாள். குறுக்கே போன தமிழரசியை கோபமாகத் தள்ளினாள்.

பாட்டியையே பார்த்துக் கொண்டு நின்ற தமிழரசியை, ரயிலின் விசில் சத்தம் ஊடுருவியது. உடனே, தனது ரயிலுக்கும் நேரமானதைப் புரிந்துக் கொண்டாள். போலீஸ் அடியாலோ அல்லது சித்தப்பாவும், கலாவதியும் அனுபவித்த கொடுமையைப் பார்த்ததாலோ, மீண்டும் பைத்தியமான முத்துமாரிப் பாட்டி முகத்தில், உலகத்துக் கொடுமைகள் அத்தனையையும் கண்டு விட்டு ஆவேசத்துள் துடித்து நின்ற தமிழரசி, பாட்டியை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு, பயணத்தைத் தொடர்ந்தாள்.

ரயில் நிலையம் வந்ததும், அவசர அவசரமாக டிக்கெட் எடுக்க, கியூவில் நின்றாள். அப்போது, ஒரு போலீஸ்காரர் அவளை அதட்டிக் கேட்டார்:

“ஒன்ன சப்-இன்ஸ்பெக்டர் கையோட ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வரச் சொன்னர். ஸ்டேஷனுக்கு நடம்மா.”

13

போலீஸ்காரர் அதட்டுவதுபோல் கேட்டது தமிழரசிக்கு என்னவோ போலிருந்தது. டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் நின்ற பயணிகள் வரிசையைக் கலைத்து, போகப் போகும் ரயிலேயும் மறந்து ‘ரவுண்டானார்கள்’. இதைப் பார்த்த மற்றும் பலர் ஒன்று திரண்டு வந்தார்கள். தமிழரசியை, போலீஸ்காரர் அதட்டுவதை, ஒருவித ரசனையோடு பார்த்து விட்டு, இன்னும் அவர் வேறு ஏதாவது திட்டுவாரா என்பதைக் கேட்க, மிக்க ஆவலோடு காத்திருந்தார்கள். தமிழரசி, நாகரிகத்-