பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

நெருப்புத் தடயங்கள்


கிறதோ இல்லையோ, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நடைபெறும் என்பதை எடுத்துக்காட்டுவது போல், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 'லோகல்' அரசியல்வாதிகள் போலீஸ் நிலைய வராண்டாவில் கூடிப் பேசியபடி நின்றார்கள். அவர்கள் முகங்களையே பார்த்தபடி திறந்த வெளியில் 'அடிதடிக்காரர்கள்’ நின்றார்கள். போலீஸ் முன்னிலையில் விவகாரத்தை முடித்துக் கொள்வதற்கு அன்றும் முயற்சி செய்யப் படுவதுபோல் தோன்றியது, இதற்கிடையே திறந்தவெளி கட்டாந்தரையில் சில ஏழை பாழைகள் 'பழி' கிடந்தார்கள்.

தமிழரசி, போலீஸ் நிலையத்திற்குள் துழைந்ததும், தனக்குத் தெரிந்தவர்கள் யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்தாள். தெனபட்டார்கள். முத்துலிங்கம், தன் தந்தையுடனும், பங்காளிகளுடனும், ஒரு வேப்ப மரத்தடியில் நின்றபடி, காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தார். அவளேப் பார்த்ததும், அவர் தலையை முன்னும் பின்னும் ஆட்ட, உடனே அவருடன் நின்றவர்கள் அவளே ஒருசேரப் பார்த்தார்கள். அவர்களைப் பார்த்ததும், தமிழரசி கம்பீரப்பட்டாள். குழம்பிய சிந்தனை கூர்வேலாகியது. துவண்ட கால்கள் துருதுருத்தன. வெளுத்த கண்கள் சிவந்தன.

போலீஸ் நிலையப் படிக்கட்டுகளில் ஏறி நின்று சற்று நிதானித்துப் பார்த்தாள். கட்டிடத்தில் நடுநாயகமாய் போட்டிருந்த பெரிய மேஜையை ஒட்டியிருந்த நாற்காலி காலியாக இருந்தது. அதன் பக்கவாட்டில் போடப்பட்டிருந்த மேஜைமீது பலப்பல ரிஜிஸ்டர்கள். அவற்றைப் புரட்டிக் கொண்டிருந்த ஒரு ரைட்டர். இடது பக்கம், அளிப் பாய்ந்த கம்பிகளை ஜன்னல்களாகக் கொண்ட உள்ளறையில் நான்கைந்து பேர் தார் பாய்ந்த வேட்டிகளோடு கம்பிகளில் முகம் பதித்து, கண்களில் நீர் பதித்து நின்றார்கள். வலது பக்கம், ஆயுதக்கிடங்கு போலிருந்த