பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

நெருப்புத் தடயங்கள்


மலே, அவர் தலைலர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு, வண்டியை ஒரு சுழற்றுச் சுழற்றி, ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, தமிழரசியைப் பாராதது போல் 'பாவலா’ செய்தபடியே, பெரிய நாற்காலியில் உட்கார்ந்தார். "வெட்டாம்பட்டி அக்கூஸ்டுக்கு வாரண்ட் வாங்கியாச்சா" என்று ரைட்டரிடம் கேட்டபடியே, ஒரு சில ரிஜிஸ்டர்களைப் புரட்டினார். இதற்குள், முத்துலிங்கம் தம் கோஷ்டியுடன் வராண்டாவிற்கு வந்தார். 'லோகல்கள்' சப்-இன்ஸ்பெக்டரை மொய்த்துக் கொண்டார்கள். அவர்களிடம் தக்காளி விலை கிலோ பத்து ரூபாய்க்குப் போனதில் இருந்து, வெயில் எப்படி மோசமாய் இருக்கிறது என்பது வரைக்கும், சப்-இன்ஸ்பெக்டர், சாவகாசமாய் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேச்சை கவனமாகக் கேட்ட லோகல்களில் ஒருவர், "அந்த விவகாரத்தை ஒரு வழியா முடிச்சுட்டோம்..." என்றதும், போலீஸ் அதிகாரி, 'முடிச்சு' விவகாரத்தை சுவாரஸ்ய மாய் கேட்கப் போனார்.

வருவதற்கு முன்பு ஒன்றரை மணி நேரமும், வந்த பிறகு அரை மணி நேரமும் காத்திருந்த தமிழரசி, பொறுமை இழந்தாள். காரமாகக் கேட்டாள்:

"என்னை எவ்வளவு நேரம் காக்க வைக்கப் போறீங்க? அதையாவது சொல்லிட்டுப் பேசுங்க!"

லோகல் லீடர்கள், வாயடைத்து நின்றபோது, சப்-இன்ஸ்பெக்டர், அவர்கள் முன்னிலையில் தன் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள நினைத்தவராய், "பொறுங்கம்மா, சில்லறை விஷயங்களை முடிச்சுகிறேன்" என்றார்.

"சில்லறை செலவாகாமலே இருக்கும். என்னை எதற்காகக் கூப்பிட்டிங்க சார்? மொதல்ல அதைச் சொல்லுங்க சார்."

"ஒன்று ஞாபகம் வச்சுக்கங்கம்மா. இது காலேஜ் இல்ல, நான் ஒங்க ஸ்டூடண்டும் இல்ல. போலீசிற்கு,