பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

நெருப்புத் தடயங்கள்



அவன்கிட்டேபேசிக்கலாம். இப்போ வந்துடுவான். டேய் பிள்ளை யாரு! இன்னும் ஏன் அவன் வர்ல?”

"நிதானமாய் வரட்டேன், இப்போ என்ன அவசரம்?”

இதற்கிடையே, போலி சார் நன்கொடையாய் கொடுத்த காயங்களில், கயிறு அழுத்தியதால் மாடக் கண்ணு, வலி தாளாமல் கூப்பாடு போட்டார். கலாவதி, தந்தையிடம் ஒடப் போனாள். ஒருவரை இடித்துக் கீழே தள்ளிவிட்டு ஓடினாள். உடனே, பிள்ளை யார் மாமா அவளை, மல்லாக்கத் தள்ளினர். வீரபத்திர மச்சான், அவள் தலைமுடியைப் பிடித்து, தரதரவென்று இழுத்து கிணற்றுப் பக்கம் கொண்டு போனார், லேசான மனச் சாட்சி கிக்கில் தவித்த மீதி மூவரும், குப்பியில் கொண்டு வந்ததைச் சப்பிக் கொண்டார்கள். அப்போது அவள் எங்கய்யாவுக்குப் பதிலா என்னை என்ன பாடு வேண்டு மானாலும் படுத்துங்கய்யா. அய்யாவ விட்டுடுங்கய்யா,’’ என்று துடித்தபடியே கேட்டாள். உடனே, அந்த கொலை தேசப் பிரஜைகளில் ஒருவர் ‘அப்பனுக்கு வலிக்கு துன்னு இப்டி துடிக்கிறியே, இந்நேரம் எங்க பொன்மணி ஒங்கண்ணன்கிட்ட என்ன பாடுபடுறாளோ? நெனச்சுப் பார்த்தியா செறுக்கி?” என்றார்,

கலாவதி, திரு திருவென்று விழித்தபோது, மேட்டுச் சரட்டில் புரண்ட மாடக்கண்ணு, ‘எப்பா...ஒங்களத் தாம்பா... என்னை வேணுமுன்னல் ஒரேயடியாய் கொன்னுடுங்கப்பா. ஆனல் தர்மப் பிரபுக்களே! புண்ணிய வான்களே! இப்டி சித்ரவதை பண்ணுதிங்கப்பா. என்னல தாங்க முடியலப்பா’ என்றார்.

கீழே விழுந்து கிடந்த கலாவதி, கையையும், காலையும் உந்தியபடி எழுந்தாள். அருகே கிடந்த ஒரு பாராங் கல்லைத் துக்கி வைத்துக் கொண்டு, ‘ எங்கய்யாவ கொன்னால் ஜெயிலுக்குப் போகணுமுன்னு நீங்க பயப்படுறது நியாயந்தாய்யா. அதனா ல நானே...எங்கய்யாவ