பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

நெருப்புத் தடயங்கள்


கூடாது என்று கண்களை மூடிக்கொண்டாள். அய்யாவின் புலம்பலை கேட்கக் கூடாது என்று காதுகளை கைகளால் பொத்திக் கொண்டாள். இறுதியில் தன்னையே தொலைத்தவளாய், நியாயமில்லாத சந்தேகத்திற்கு உட்பட்ட, சீதாப்பிராட்டிபோல், பூமாதேவியிடம் அடைக்கலம் கேட்பவளாய், அவளுக்கும், சீதைக்குப்போல் பூமி பிளக்கும். என்று நினைத்தவளாய், பூமியோடு தன் மேனியைக் கவிழ்த்துக் கொண்டாள்.

எவ்வளவு நேரம் அப்படிக் கிடந்தாளோ, அவளுக்குத் தெரியாது. எவரோ செருப்புக்காலால் தன்னை இடறுவதைப் பார்த்து விட்டு கண் விழித்தாள்!

முத்துலிங்கம்!

அவளை, மதர்ப்பாகப் பார்த்தபடி நின்றார். கலாவதி, தடுமாறி எழுந்தாள், முத்துலிங்கத்தின் கைகளைப் பிடித்தாள். அவர் உதறியதால், தடுமாறி விழுந்தவள், மீண்டும் அவர் கால்களைப் பிடித்துக் கொண்டாள். தானே அறியாதவகையில் மன்றாடினாள்:

"மச்சான்! ஒம்மத்தான் மச்சான்... நாங்க ஒரு பாவமும் அறியாதவங்க. எங்களை விட்டுடுங்க மச்சா அய்யா துடிக்காரு மச்சான். ஒரு தடவை அவரை பக்கத்துல போய் பாரும் மச்சான். ஒமக்கே மனசு மாறும் மச்சான். எய்யா... நீரும்... மச்சான்கிட்டே பேசுமிய்யா ..."

முத்துலிங்கம், அவளைக் காலால் இடறி விட்டு, கையாட்கள் நிற்கும் பக்கமாய் நடந்தார். பிறகு "அவள்... தமிழரசியா... தடியரசியா... அந்த செறுக்கி மவளையும் இங்கே கொண்டு வந்திருக்கணும். அவள் இங்கே இல்லாதது, எனக்கு மனசு கேட்க மாட்டங்குது..." என்றார். கலாவதி, தடுமாறித் தடுமாறி, மீண்டும் அவர்