பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

நெருப்புத் தடயங்கள்


காதே. அந்தப் பயல் இருக்கிற இடத்தை மட்டும் நீ சொல்லல... ஒனக்கு உயிரோட சமாதி தான்... சீக்கிரமாய் சொல்லிட்டால், சீக்கிரமாய்... ஒன் மகளோட ஒன் வீட்டுக்குப் போயிடலாம். இல்லன்னா உயிரு தான் சீக்கிர மாய் போகும். அப்புறம் ஒன் இஷ்டம்."

மாடக்கண்ணு வாதித்தார்.

"இப்போ தப்பிக்கதுக்காக ஏதாவது ஒரு ஊரை சொல்லணுமுன்னால் சொல்லலாம். ஆனால் நான் அந்த மாதிரி வளந்தவன் இல்ல. அதனால்தானோ என்னவோ இப்டி அவஸ்தப்படுறேன்."

கையாட்களில் ஒருவர், இடைமறித்தார்.

"கிழவன விடுப்பா. இவளை விசாரிக்கிற விதமாய் விசாரிச்சால், உள்ளதைச் சொல்லிட்டுப் போறாள். இந்நேரம் நம்ம பொன்மணியை வினைதீர்த்தான் பயல் என்ன பாடு படுத்துறானோ?"

முத்துலிங்கம், கலாவதி பக்கம் வந்தார்.

"ஒன் கிட்ட ஒரே ஒரு தடவைதான் வாயால் கேட்கப் போறேன். ஒண்ணன் எங்கே இருக்கான்?"

"கூட்டிக்கிட்டு வாங்க காட்டுறேன்."

"அவ்வளவு திமுராடி ஒனக்கு?"

"பின்ன என்ன மச்சான்?... சொல்லிச் சொல்லிப் பார்த்துட்டோம். நீங்க கேட்காட்டால்... நாங்க அனாதைங்க... என்ன பண்ண முடியும்?... நீரே சொல்லும்..."

இன்னொரு கையாள், இடையில் புகுந்தார்.

"இவள் சப்-இன்ஸ்பெக்டர் கிட்டேயே நடிச்சவள். நீ எம்மாத்திரம்? வீட்டுக்குள்ள ரெண்டு பேரையும் படுக்க வச்சுட்டு, காவல் காத்த நாயை விசாரிக்கிற விதமாய் விசாரிக்காமல் கொஞ்சிறியாக்கும்."