பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

நெருப்புத் தடயங்கள்

பிள்ளையார் தலையிலும் விழுந்தன. சாய்த்தவர்கள் மேலேயே சாய்ந்தவள், அப்படியே கிடந்தாள்.

முத்துலிங்கத்தின் கையில், கதிரருவாள், சிவப்புச் சிவப்பாய் பளபளத்தது. ரத்தச் சிவப்பாய் மின்னியது. ஏழையின் பிழைப்பாயுதமான அந்த பன்னருவாளின் மரப் பிடியைப் பிடித்தபடி, முத்துலிங்கம், நிதானமாய், அடிமேல் அடியாய் நடந்தார்.

“இப்போதாவது உண்மையைச் சொல்லு” என்று கேட்கப் போனவர், வாயை மூடிக் கொண்டார். வினை தீர்த்தான் வந்தாலும் சரி, கிடைத்தாலும் சரி, கலாவதியை விடப் போவதில்லை என்ற கங்கணக் கொடுமை விழிகளோடு, கலாவதியின் விழிகளை பலவந்தமாகத் திறந்தார். நெருப்புத் துண்டை நீட்டினார்.

“இந்தக் கண்ணுதானடி காவல் பார்த்தது” என்று சொல்லியபடியே, நெருப்புத் துண்டை கண்களுக்குள், கொடுமையின் அடிக்கல்லாக நாட்டப் போனபோது, கலாவதியின் அனிச்சை உணர்வு, விழிகளை, அவரிடம் இருந்து விடுபட வைத்து, மூடச் செய்தது. இதனால் கண்களுக்குள் போகப் போன சூட்டருவாள், கலாவதியின் இமைகளுக்குக் கீழே பட்டது பட்ட இடம் பொசுங்கியது. அவள் மீண்டும் “எய்யோ ... எய்யோ ...” என்றாள்.

மனித ரத்தம் ருசி கண்ட புலிபோல முத்துலிங்கம் மாறினார்.

“இந்தக் கையாலதானடி அவங்களுக்கு வழியனுப்பினே?” என்று கைகளில் சூடு போட்டார். “இந்த நெஞ்சுல தானடி அவங்க போன இடம் மறைஞ்சு இருக்கு” என்று மார்பகங்களிலும் மார்பகங்களுக்கு மத்தியிலும், காய வைத்த அரிவாள் முனையை ஏவி விட்டார்.

“இந்த வாய்தானடி அவங்கள போகச் சொன்னது” என்று அவர் கத்தியபோது, தீக்கோல், அவள் வாய்க்குள்