பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

153

நுழைந்தது, இப்படி ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு தொழிலைக் கற்பித்து, ஒவ்வொரு விதமாக பன்னருவாள் முத்திரையிட்டது. கலாவதிக்கு எங்கெல்லாம் நெருப்பு முத்திரையை பதிக்கமுடியுமோ, அங்கெல்லாம் பதித்தார்.

உடம்பின் ஒன்பது வாசல்களில், கண் வாசல்கள் தவிர, மீதி வாசல்களை, அரிவாள் முனை, அனலாய் சுட்டெரித்தது. உடம்பு முழுவதும் அந்தத் தீக்கோலால், அவர் கொடுங்கோல் புரிந்தபோது, முதலில் “எய்யோ ... எய்யோ” என்ற கலாவதி, பிறகு அந்த அரிவாள் முனை, உடம்பில் சூட்டை கக்கக் கக்க, அதே விகிதத்தில் உயிரை உடம்பிலி ருந்து கக்கி விட்டவள் போல, ‘ஆங்...ஆங்’ என்று மட்டும் தனக்குள்ளே புலம்பி, தனக்குள்ளே தவித்தாள். கடைசியாக, உடம்பில் எல்லாப் பக்கமும் பொசுங்கியதால், நிற்க முடியாமல் கீழே விழுந்தாள். வலி தாங்க முடியாது தரையில் புரண்டாள்! பிறகு புரளாமலே கிடந்தாள்.

திடீரென்று சரல் மேட்டில், உயிரை உறைய வைப்பது போல் சத்தம் கேட்டது. குறுக்கப்பட்ட மாடக்கண்ணு மரணப் பிரகடனத்தை வெளியிடுபவர் போல் வெளியிட்டார்.

“அடேய் முத்துலிங்கம்! என் பெண்ணையாடா பண்ணாத கோலமெல்லாம் பண்ணிட்டே? ஒரு காலத்துல ஒம்மா இதே இந்தத் தோட்டத்துல, என் கையைப் பிடிச்சு இழுத்து சோளத்தட்டைக்குள்ளே கூப்பிட்டபோது, அவளை கையெடுத்துக் கும்பிட்டு ஓடினவண்டா நான். அப்படிப்பட்டவன் பெத்த மகளயாடா இந்தப் பாடுபடுத்துரே? ஒன்னோட சொத்துல்லாம் ஒம்மாவுக்கு வெளியூர் வியாபாரிங்க கொடுத்ததுடா. ஒம்மா சங்கதிய ஊர்ல கேட்டுப் பாருடா. கடவுள் ஒன்னை விட மாட்டாண்டா, ஆண்டவா! நீ இருக்கியா... இருக்கியா... நீ இருக்கப்படாது... நீ அப்படி இருந்தால் இவன்கூட சேர்ந்ததா அர்த்தம் ஆயிடும். அடேய்... என் மவள