பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


16

கேரளம்போல், சாலை நெடுக வீடுகளாகவும், அவற்றின் முன்னாலும், பின்னாலும் முக்கனி மரங்களோடு, ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த பாக்கு மரங்களும், தென்னை மரங்களும் மலிந்த பகுதி; நாகர்கோவிலில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சாலையோர காவல் நிலையம். திருவனந்தபுரத்திலிருந்து, கன்னியா குமரிக்கு அடிக்கடி ‘வி.‘ஐ. பி. க்கள்’ போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருப்பதால், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதைவிட, பொதுமக்களிடமிருந்து ‘தலைவர்களுக்குப்’ பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற லட்சியத் துடிப்புடன், மக்களையே சந்தேகப் பேர் வழிகளாய் நினைத்து, செயல்பட வேண்டிய கேந்திர நிலையம்

தனித்திருக்க விரும்பியது போல், பக்கவாட்டில் உள்ள அறையில், எல்லாவற்றையும் இழக்கத் தயாரான ஏகாந்தி போல், தன்னையறியாமலே தலையால், ஆகாய அந்தரத்தில் வட்டமடிதத தாமோதரன், உரத்த சத்தம் கேட்டு, வெளியே உற்றுப்பார்த்தான். யாரோ ஒருவர், ‘ஏட்டு’ பொன்னுச்சாமியிடம், படபடப்பாய்ப் பேசிக் கொண்டிருந்தார். உடனே அவன், தன் இருக்கையில் இருந்து எழுந்து அந்த இடத்திற்குப் போய், பேசியவரை அதட்டலாகக் கேட்டான்:

“என்னய்யா விஷயம்?”

“ஒண்ணுமில்லிங்க. என் வயலுல தண்ணீர் பாயக் கூடாதுன்னு, என் தம்பி வாய்க்காலை அடைச்சுட்டு, கொடுக்கரிவாளோட வாய்க்கால்பக்கம் நிக்கிறான். அவன் பக்கத்துல போகவே பயமாய் இருக்கு. இன்னிக்கு வயலுல. தண்ணீர் போகாட்டால், போட்டபயிரு பொசுங்கிப்