பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

167

சற்று தொலைவில் உயிர்ப்பில்லாமல் நின்ற போலீஸ்காரர் பொன்னுச்சாமியைப் பார்த்தபடியே சொல்லிக்கொண்டு, மீண்டும் எண்களைச் சுழற்றினார்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ‘லைட்னிங்’ கால் கிடைத்தது. ரைட்டர், ரிஸீவரை தாமோதரனிடம் நீட்டினார். அவன், வேண்டா வெறுப்பாகப் பேசினான்.

“ஹலோ சோமசுந்தரமா? தாமோதரன் ஹியர்! என்ன நீங்களே என் கிட்ட பேச நினைத்தீங்களா? எங்கண்ணாவா? இங்கே இல்லியே. சாரி... இங்கேதான் இருக்கார். என்ன... என்ன... ஆ... அய்யய்யோ ... அப்புறம்... அடகடவுளே... பிறகு ஊரு... கொதிக்காமல் என்ன சார் செய்யும்! ஒங்களுக்கு என்ன தோணுதோ அதைச் செய்யுங்க. என் தலைவிதி இப்படிப்பட்ட குடும்பத்துல பிறந்து தொலைச்சிட்டேன். நைட்ல பேசுவீங்களா? தேங்யூ! கலாவதி பிழைச்சுக்குவாளா? என்ன .. இப்போ சொல்ல முடியாதா? அவ்வளவு சீரியஸா... நீங்ககூட ஒண்ணும் செய்ய முடியாதா? செய்ய வேண்டாம். ஓகே.”

டெலிபோன் ரிஸீவரை, தாமோதரன் வீசியெறிந்தான். அது சில்லி சில்லியாய் உடைந்து சிதறியது. ஒரே ஒரு துண்டு மட்டும், எஸ்டேட்டில் தூக்கில் தொங்கிய ஏழைத் தொழிலாளி போல, டெலிபோன் ஒயருடன் ஒட்டிக் கிடந்தது. தாமோதரன் எழுந்தான். கைகளைப் பிசைந்தான். ‘சே...சே’ என்றபடி, கைகளை முதுகிற்குப் பின்புறமாய் கட்டியபடி, குறுக்கும் நெடுக்குமாய் நடந்தான். முத்துலிங்கம், அவனைப் பயத்தோடு பார்த்த போது, அவன் பயங்கரமாய் கத்தினான்:

போலீஸ்ல எல்லாம் சொல்லிட்டாங்க. மாடக் கண்ணு மாமாவை கையைக் காலைக் கட்டி கிணத்துக்குள்ளே போட்டிருக்கே. கலாவதிக்கு கண்ட கண்ட இடத்துல எல்லாம் சூடு போட்டிருக்கே, தேவையில்லாமல், கொலை-