பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

171

முதலாளி பூமிநாதன் ஓட்டிவந்தார் என்பதும் தெரியாமல் இந்த போலீஸ் இளைஞன் போகிறானே... சிலந்தி வலையில் விழுகிறானே... இந்த டிபார்ட்மெண்டில் இவன் குப்பை கொட்டவேண்டும் என்று உம்மை தோத்திரம் செய்தது உண்மைதான் கர்த்தரே. இப்போ மறுபடி கேட்கிறேன்... இவன் குப்பை கொட்டுகிறானோ இல்லையோ, குப்பையாகாமல் பார்த்துக் கொள்ளும் பரமபிதாவே!”

“ஏசாண்டவரே! ஒருவன் செய்த பாவத்தில், ஒருவன் பலியாகிறான். இன்னொருவன் பாவியாகிறான். அப்படியானால் பாவம் தொற்று நோயா? பலிகேட்கும் பாசமா? எப்படியோ, என் ஆண்டவரே! இதுவரை நல்வழியில் போன இந்த இளைஞனைக் காப்பாற்றும். சாத்தான் இவனைப் பாவக்குழியில் தள்ளப் போகிறான், தேவகுமாரனான நீர் என்ன செய்யப் போகிறீர்?”

17

த்து நாட்கள், மாடக்கண்ணுவைப் போல் கடந்த காலமாயின.

சினிமா தியேட்டர் ஒன்றிற்கு, ‘டூட்டியில்’ போயிருந்த நான்கைந்து போலீஸ்காரர்கள், அந்த நள்ளிரவில் கலாவதியைத் தூக்கிக் கொண்டு போன பேச்சிமுத்துலையும், வீரபத்திரனையும் வழிமறித்து, அவர்கள் பிடறியில் இரண்டு போடு போட்டார்கள், லத்திக்கம்புகள் உயர்ந்த போது, அவர்கள் நடந்தனத நடந்தபடி சொல்லிவிட்டார்கள்.

குற்றுயிரும் கொலையுயிருமாய் துடித்த கலாவதியைப் பார்த்த அந்த மனிதப் போலீசார், பேச்சிமுத்துவையும், வீரபத்திரனையும், லத்திக்கம்புகளால் வாங்கு வாங்கென்று வாங்கி விட்டார்கள். ஆனால், அந்த சூட்டுக்கோல்காரர்-