பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

நெருப்புத் தடயங்கள்

களின் நல்லகாலம், கலாவதி, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய கெட்ட காலத்தில் இருந்தாள். இல்லையானால், அப்போதைக்கு மனிதாபிமானத்தின் உச்சக்கட்டத்தில் இருந்த அந்த போலீசார், அங்கேயே, அந்த இருவரையும், கலாவதியை மாதிரி ஆக்கியிருப்பார்கள். ‘யானை இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பதுபோல், அவர்கள் உயிர் தப்ப, கலாவதியே காரணமானாள்.

போலீசார், கலாவதியை அருகே இருந்த அரசாங்க மருத்துவமனையில் உடனடியாகச் சேர்த்தார்கள். குற்றவாளிகளின் கைகளை சேர்த்துக்கட்டி, ‘ஏரியா’ போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். ‘ஏரியா’ போலீசார், பேச்சிமுத்துவையும், வீரபத்திரனையும், ஊருக்குள் கொண்டு வந்தபோது, தோட்டத்தில் இருந்து திரும்பிய ஒருவன் அகப்பட்டான். அவனையும் ‘கட்டிப்பிடித்த’ போலீசார், சூடுபோட்ட இடத்திற்கு, கூட்டத்தோடு கூட்டமாய் ஓடியபோது தான், முத்துலிங்கம் எதிர்ப்பட்டார்.

அவரைத் துரத்தினால், ஆசாமி தப்பித்து விட்டார். அப்புறம் அவரைக் கவனித்துக் கொள்ளலாம் என்று நினைத்தார்களோ அல்லது அவர் ஒரு சப்- இன்ஸ்பெக்டரின் அண்ணன் என்ற எண்ணமோ, போலீசார், முத்துலிங்ககத்தை விட்டு விட்டு, அவர் தோட்டத்தை முற்றுகையிட்டார்கள். மாடக்கண்ணுவின் பிணத்தைத் துழாவி எடுத்தார்கள். ஊர் வழியாய் போனால் ரகளை நடக்கும் என்று நினைத்து, கலாவதி எந்த வழியாகத் தூக்கிக் கொண்டு போகப்பட்டாளோ அந்த வழியாக, அவள் அப்பாவையும் தூக்கிக் கொண்டுபோய், அரசாங்க மருத்துவமனையில், பிரேத பரிசோதனைக்காகச் சேர்த்தார்கள். பிறகு பிணத்தை ஒப்படைப்பதற்கு, தமிழரசியின் தந்தை அருணாசலத்தை அணுகினார்கள். அவர் முதலில் தயங்கினார். பிறகு ஊருக்கும், உறவுக்கும் பயந்து, பிணத்தை