பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

5


கொண்டை சரியில்லம்ப, அப்புறம் மூக்கு சரியில்லம்ப, வந்தோமா பார்த்தோமான்னு உட்காரேன்!" என்றாள்.

'பாட்டி பேசுனால் பேசட்டுமே...' என்று தன் கொண்டையை இறக்குவதற்காக தமிழரசி கைகளை தலைக்கு மேல் குவித்தபோது, முத்துமாரிப் பாட்டி எகிறினாள்.

"ஏண்டி கலா, ஒன்கிட்ட எந்த விவகாரமும் இல்லங்ற தைரியத்துலயா பேசுறே? வரட்டும், வரட்டும், நீயும் 'ஆம்புள' விஷயத்துல சிக்காமலா இருக்கப்போற? வயசு இருக்கத்தானே செய்யுது? பேய்ப்பய மவளே ...நான் எதுக்குச் சொன்னேன்னு கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா? முகம், குடுவை மாதிரி கூம்பாமலும், பனங்காய் மாதிரி படராமலும், மூக்கு சப்பாமலும், முன்னால நீளாமலும், கழுத்து கொக்கு மாதிரி வளையாமலும், குடமிளகாய் மாதிரி குறுகாமலும், இந்த நாடு ராச்சியத்தில... என் ராசாத்தி 'தமிளு' மாதிரி யாரு பிள்ள இருக்காவ? ஊருக்கு... எத்தனயோ பேரு.... ஆபீஸரா இருக்கவமுல்லாம் வாரான்... இவள பார்க்க வாரது மாதிரி ஊர்க் கூட்டம் எங்கேயாவது உண்டா? அவள் கொண்ட அழகாத்தான் இருக்கு திருஷ்டிப் பரிகாரமாய் சாய்க்கச் சொன்னேன். நீ என்னடான்னால்..."

கூட்டத்துப் பெண்களில் ஒருத்திக்கு மாமியார் உயிரோடு இருப்பது நினைவுக்கு வந்தது. அதே சமயம், தமிழரசியிடம் நேருக்கு நேர் இரண்டு வார்த்தை பேசாமல் போக மனம் வரவில்லை.

"பாட்டி, நாங்களும் எங்க பங்குக்கு கொஞ்சம் பேசாண்டாமா? நீயே பேசிக்கிட்டே இருந்தால் எப்டி? நகரு."

"எப்டிளா நகர முடியும்? அஞ்சு வருஷத்துக்கு முன்னாலயே என்னவெல்லாமோ எழுதி, எனக்கு மாசா