பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

183

சம்சாரம் “இந்தப் பஞ்சாயத்தால, பிடிபடாத முத்துலிங்கம் மட்டுந்தான் தப்பிக்காரா, பிடிபட்ட எங்க ஆட்களும் தப்பிக்காங்களா?” என்றாள் அழுகையோடு.

அந்த அழுகையில் உள்ள மூலதன முதலீட்டைப் புரிந்து கொண்ட மொய்தீன் “ஒங்க புருஷன்மாரு உயிரோட திரும்பணு முன்னால், ஆளுக்கு ஐநூறு ரூபாய் சீக்கிரமாய் கொண்டு வரணும்” என்றார். இதை ஆட்சேபிக்கப் போன குற்றேவல்காரர்களின் குடும்பத்தினர், வீரியத்தை விட காரியம் முக்கியம் என்பதை உணர்ந்தவர்களாய், உள்ளூர் வட்டிக் கடைக்காரரைத் தேடி காதுகளையும் கழுத்துகளையும் தடவியபடியே ஓடினார்கள்.

கில்லாடியார் ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார்.

“மாடக்கண்ணு தற்கொலை பண்ணுனார்னு சொல்றதைவிட, வினை தீர்த்தானே வந்து, நம்ம அப்பாவி முத்துலிங்கம்மேல பழிவரட்டுமுன்னு, அப்பனை ராத்திரியோட ராத்திரியா வந்து சாகடிச்சிட்டுப் போயிருப்பான்னு நினைக்கேன். பஞ்சாயத்தார் தீர்ப்பு இப்டி இருந்தால் நல்லா இருக்கும்.”

தர்மகர்த்தா, இப்போது அதட்டலோடு பேசினார்.

“ஏல கில்லாடி! ஒனக்குத் தான் பேசத் தெரியுமுன்னு பேசாத. அப்புறம் நீதான் வருத்தப்படப் போறே. இந்த விவகாரத்துக்குப் பின்னால், யாருல்லாம், எதுல்லாம் இருக்குன்னு தெரியாமல் கிண்டல் பண்ணாதடா.”

கில்லாடியார் அடங்கிப் போனவர் போல், தலையைத் தாழ்த்திக் கொண்டார். சப்தம் அடங்கியதும், பாதிரியார் எல்லோரையும் கையமர்த்திவிட்டு, நிதானமாகப் பேசினார்.

“ஒரு கெட்டதை முடித்த கையோட இன்னொரு நல்லதையும் நடத்திடுவோம். நம்ம ராஜதுரைக்கும்,