பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

191

அரைப் பைத்திய’ நிலைக்கு ஈடு கொடுத்ததோடு, அவ்வப்போது ஆறுதலும் சொன்னாள்.

மூன்றாண்டு காலமாக, சென்னையில் பிரபலமான உழைக்கும் பெண்கள் விடுதியில், தங்கி இருக்கும் தமிழரசி, அதை தன் சொந்த வீடு போலவே நேசித்தாள். ஆண்டுக்கு மூன்று தடவை, அவளே முன்நின்று, ‘ஹாஸ்டல் மேட்களை’ ஒன்று திரட்டி, எங்கேயாவது ‘பிக்னிக்’ போக ஏற்பாடு செய்வாள். தேக்கடிக்குப் போன போதும், ஒகேனக்கலுக்குப் போன போதும் அவளே முன் நின்று, எல்லாப் பொறுப்புகளையும் வலியச் சுமந்தாள். இந்தத் தடவை அவள் ஒதுங்கிக் கொண்டபோது, தலைமைப் பொறுப்பை, தகுதி இல்லாமலேயே பெற விரும்பிய சில பெண்கள் பொறுப்புக்களை மேற்கொண்டார்கள். வரமறுத்த தமிழரசியை, இந்த பத்மாதான் வரவழைத்தாள்

மீன்களோடு போட்டி போட்டு துள்ளிக்குதித்த நீர்த் துளிகளைப் பார்த்ததாலோ என்னவோ, தமிழரசிக்கு, ஏதோ ஒருவகை வீரியம் ஏற்பட்டது. ஊரில் என்ன நடந்தது என்பதைப் பற்றி அறிய மனமில்லாமல் இருந்தது பொறுப்பற்ற செயல். தொட்டிலையும் ஆட்டி, குழந்தையையும் கிள்ளிவிட்ட செயல். முதல் வேலையாய் சென்னைக்குப் போனதும், அடையாறில் உள்ள மகாலிங்கம் மெடிக்கல்ஸ் உரிமையாளர் ராஜகோபாலுக்கு டெலிபோன் செய்ய வேண்டும். பக்கத்து ஊர்க்காரர், இல்லையானால், ஊரில் யாருக்காவது லட்டர் எழுதிக் கேட்க வேண்டும். வாரம் ஒருமுறை வீட்டுக்கு லட்டர் போடுறதை நிறுத்தி ஒரு மாதமாச்சுது. அவங்களும் போடல. கலாவதி எப்படி இருக்காளோ? வினை தீர்த்தான்–பொன்மணி ஊருக்குப் போய் விட்டார்களோ என்னமோ?

தமிழரசியின் முன்னாள் மாணவியும், இந்நாள் மேல் நிலைப்பள்ளி ஆசிரியையுமான அலமேலுமங்கை, “மேடத்துக்கு என்ன வந்தது? எல்லாத்துக்கும் முன்னால