பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

நெருப்புத் தடயங்கள்

ஆய்வு என்கிறது பிரபலமானவங்களோட படைப்புகளை மட்டும் பரிசீலனை செய்யுறது இல்ல. உண்மையான ஆய்வு, மொதல்ல தக்க படைப்பாளிகளைக் கண்டுபிடிக்கிறதுல துவங்கணும். இப்போ எவ்வளவோ புதுக்கவிதை புத்தகம் வருது... நமக்குத் தெரிந்தவங்களைவிட, இந்த தெரி யாதவங்க சிறப்பாய் எழுதியிருக்கலாம். தேடிப் படிக்கணும். எனக்குத் தெரிந்த வரைக்கும் கவிஞர்கள் தணிகைச் செல்வன், ஈரோடு தமிழன்பன், இன்குலாப், ஜீவபாரதி, பழனி சுந்தரேசன், வெங்கடேசரவி இவங்க அடித்தள மக்களைப் பற்றி மட்டும் எழுதல, பொருளாதாரத்துல அடித்தள மக்கள் முன்னேறாத வரைக்கும் நாங்களும் முன்னேற மாட்டோமுன்னு பப்ளிசிட்டிக்கோ பணத்துக்கோ ஆசைப்படாமல் இருக்காங்க.”

“தேங்க் யூ மேடம்!”

“நான்தான் ஒனக்கு தேங்ஸ் சொல்லணும்.”

எல்லோரும் தமிழரசியையே பார்த்தார்கள். வெளியே தோற்றது போல் பாசாங்கு காட்டிய அந்த முன்னாள் மாணவி, வெற்றி மதர்ப்போடு திரும்பினாள். பேசி முடித்த தமிழரசியோ, தன் முன்னால் தனியாய், அந்தரத்தில் தொங்கிய அச்சமும் ஆவேசமும் இயலாமையும் ஏக்கமும் உருக்கமான பூதம் ஒன்று தன்னை வாரிச் சுருட்டி, வாயில் போடப் போவதைப் பார்த்தவள் போல் பத்மாவுடன் நெருக்கியடித்து உட்கார்ந்தாள். உடனே பத்மா, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே! “மனம் நெருப்பு மாதிரி, எதையாவது ஒன்றை பற்றாமல், தனியாய் நிற்காது... முடியாது. அதனால் இந்த மாதிரி பாஸிட்டிவ்வாய் பேசு” என்றாள்.

டீலக்ஸ் பெண்களோடு, அந்த டீலக்ஸ் பஸ் புறப்பட்டது. மேட்டில் பதுங்கிப் பதுங்கி ஏறி, பள்ளத்தில் பாய்ந்து, திருப்பதி—சென்னை சாலைக்கு வந்து, சீராக ஓடியது. தமிழரசி, கோனைப் பகுதிக்குள் இருந்த