பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

195

இன்னொரு, விநாயக முருக ஆலயத்தைக் கையெடுத்துக் கும்பிட்டாள். பஸ்லே, சிரிப்பும் கும்மாளமுமாய் பேசிச் செய்வது போல் பெண்கள் ஒலி, பெருவொலியானது.

பிச்சாட்டூர் ‘டானா’ வளைவைத் தாண்டி, பஸ் பாய்ந்த போது, சில பெண்கள், “ஹோல்டான்... ஹோல்டான்... பூ... வாங்கணும்” என்றார்கள். பஸ் நின்றதும், பெண் பட்டாளம், கீழே இறங்கி, பூ வாங்காமல் சோடா குடித்தார்கள்.

பஸ்சுக்குள்ளேயே இருந்த தமிழரசி, “மொதல்ல இறக்குறதை இறக்குறேன், காசைப் பற்றி கவல இல்லை,” என்ற பழக்கப்பட்ட குரல் கேட்டு, பஸ்சிற்கு வெளியே கழுத்தை நீட்டி, எட்டிப் பார்த்தாள்.

தார் பாய்ந்த வேட்டியோடு, வேர்வை பாய்ந்த மேனியோடு, ஒருவன் எதிர்ப்புறத்து பஸ்சில், பால் கேன்களை இறக்கிக் கொண்டிருந்தான்.

வினை தீர்த்தான்!

19

கோனையில் இருந்து தோழிகளுடன் திரும்பும்போது, மனதை அங்குசம் பாய்ந்து கட்டுப்படுத்தி விட்டதாகத்தான் தமிழரசி நினைத்தாள். ஆனால் இப்போது வினை தீர்த்தானைப் பார்க்கப் பார்க்க, அடக்கப்பட்ட உணர்வுகளும், உளைச்சல்களும் ஆவேசமாய் வெளிப்பட்டன. நம்ப முடியாமல் போனவனை, நம்ப முடியாத கண்களோடு பார்த்தாள். எவன், தான் மடியும் வரை விடியாத ஒரு பிரச்சனைக்கு விடையில்லா கேள்வியாய் போனானோ, அவன் பிரச்சனை ஏதும் இல்லாதவன் போல் அனாவசியமாய் பஸ்சிலிருந்து, பால் கேன்களை இறக்கிக் கொண்டிருப்பதைப் புார்க்கப் பார்க்க, அவள் இறந்து கொண்டிருந்தாள். அவள் கண்கள் தங்களையே எரிப்பவைபோல் எரிந்தன.